IMG-LOGO
Home கட்டுரை இலங்கை கரையோரங்களில் கடல் வாழ் உயிரினங்கள் கரை ஒதுக்கும் அவலம்!

இலங்கை கரையோரங்களில் கடல் வாழ் உயிரினங்கள் கரை ஒதுக்கும் அவலம்!

by Haren - Date : 2021-Jun-07
IMG

இலங்கை தென், மேல் கடற்கரையோரங்களில் கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்க ஆரம்பித்துள்ளன.

அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம்.வி எக்ஸ்பிரஸ் கப்பலில் இருந்த இரசாயனப் பொருட்கள் கடலில் கலந்ததால் இவ்வாறு கடல்வாழ் உயிரிழனங்கள் கரையொதுங்க ஆரம்பித்துள்ளன.

அடுத்த சில நாட்களில் இந்த நிலைமை மோசமாகக் கூடும் என்று கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆர்வலர்களும், தொண்டு அமைப்பினரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடல் உணவை உட்கொள்வதில் மக்கள் மத்தியில் அச்சம்

கப்பலில் இரசாயனப் பொருட்கள் இருந்தமையும், அவை கடலில் கலந்துள்ளமையும் குறித்த செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் கடல் உணவுகளை உட்கொள்வதில் மக்கள் மத்தியில் அச்சமும் சந்தேகமும் ஏற்பட்டுள்ளன.

இதனால் கடல் உணவு விற்பனையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மீன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், கடல் உணவை உட்கொள்வதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கடல்சார் ஆய்வு நிறுவனமான நாரா அறிவித்துள்ளதாக இலங்கை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆய்வு செய்து சமர்ப்பித்துள்ள ஆரம்ப அறிக்கையில் நாரா நிறுவனம் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

எனினும், கடல்வாழ் உயிரிழனங்கள் கரையொதுங்க ஆரம்பித்துள்ள நிலையில், கடல் உணவுகளை உட்கொள்வது குறித்த சந்தேகங்களும், அச்சமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

விபத்திற்குள்ளாக கப்பல் குறித்த கேள்விகளும், சந்தேகங்களும்

அபாயகரமான இரசாயன பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் குறித்த தகவல்களை மறைத்து இந்தக் கப்பல் பயணத்தை மேற்கொண்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக எகனமிக் டைம்ஸ் என்ற ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தீக்கிரையான நிலையில் மூழ்கும் கப்பலின் அடிப்பகுதியல் காணப்படும் பொருட்கள் மற்றும் எண்ணெய் கசிவுகள் குறித்து ஆராய்வதற்காக ஆழ் கடல் சுழியோடிகளின் பிரசன்னம் குறிப்பிட்டளவு தடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்புக்கு அருகே ஐந்து அபாயகரமான இரசாயன பொருட்கள் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களுடன் விபத்துக்குள்ளான எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ள் வணிகக் கப்பல் கடலில் மூழ்கியுள்ளதோடு, இந்ந நிலைமையானது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக எகனமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் நுழையும் நோக்கில் நங்கூரமிடப்பட்ட நிலையில் கடற்பரப்பில் விபத்துக்குள்ளானது.

கப்பலில் இருந்த அபாயகரமான இரசாயன பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் குறித்த தகவல்கள் மறைத்து எடுத்துச் செல்லப்பட்டதா என்ற சந்தேகநிலை தோற்று வித்துள்ளது, ஏனெனில் மூழ்கும் கப்பலின் அடிப்பகுதியல் காணப்படும் பொருட்கள் மற்றும் எண்ணெய் கசிவுகள் குறித்து ஆராய்வதற்காக ஆழ்கடல் சுழியோடிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தியது மாத்திரமன்றி, பாதுகாப்பு தொடர்பான அச்சத்தையும் தோற்றுவித்தள்ளதாகவும், இதனை உள்நாட்டு மக்கள் அறிந்துகொண்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கப்பல் வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதி வழியாக கொண்டு செல்ல திட்டமிட்டிருந்த பெருந்தொகை இரசாயனங்கள் குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில், இலங்கையின் அனுமதியின்றி கதிரியக்க பொருட்களுடன் சீன கப்பலொன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைந்த விடயத்தையும், பின்னர் இலங்கை அரசாங்கம் உடனடியாக அந்தக் கப்பலை வெளியேற்றிய விடயத்தையும் எகனமிக் டைம்ஸ் நினைவூட்டியுள்ளது.

இந்த பிராந்தியத்தில் சீனாவின் இவ்வகையான நகர்வுகள் குறித்து கொழும்பை தளமாகக் கொண்ட அதிகாரிகள் ஆச்சரியத்தை வெளியிட்டுள்ளனர்.

சீனாவின் ஜுஷான் சாங்ஹோங் இன்டர்நேஷனல் ஷிப்யார்ட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட எம்.வி எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் கடலில் மூழ்கியுள்ள நிலையில் அதன் தரம் குறித்த தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *