IMG-LOGO
Home கட்டுரை வரவு செலவுத் திட்டத்தின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட முகாமைத்துவ அணுகுமுறை

வரவு செலவுத் திட்டத்தின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட முகாமைத்துவ அணுகுமுறை

Date : 2020-Nov-28
IMG

இலங்கையின் வரவுசெலவுத் திட்டத்திற்கு   ஏற்புடையதான தேவை யாதெனில், அது ஞானமும் சரியான பாதையுமாகும். நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று தெரியாவிட்டால், எந்தப் பாதையும் உங்களை அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும் என்று ஒரு பழமொழி உள்ளது. விளைவினை அடிப்படையாகக் கொண்ட முகாமைத்துவத்தின் மூலம் தவிர்ந்திருக்க எதிர்பார்க்கப்படுவது, இப்பாதை பற்றிய புரிதல் இல்லாமையின் காரணமாகும். இது முதலில் ஒரு திசையையும் இலக்கையும் தேர்ந்தெடுப்பது, அங்கு செல்வதற்குத் தேவையான பாதை மற்றும் இடைநிலை நிறுத்தங்களைத் தீர்மானித்தல், ஒரு வரைபடத்தின் முன்னேற்றத்தைச் சரிபார்ப்பது மற்றும் விரும்பிய முடிவுகளை   (உதா -  வெளியீடு, விளைவு, தாக்கம்) அடைவதற்குத்  தேவையான பாதையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாகும்.

1997 ஆம் ஆண்டில் கோஃபி அனானின் தலைமையில், ஐக்கிய நாடுகளின் திட்ட வரவு செலவுத் திட்டத்தின்  உள்ளீட்டு கணக்கியல் முறையிலிருந்து முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட பொறுப்புக்கூறலுக்கு மாற்றப்பட்டது. அத்தகைய அணுகுமுறைக்கு முரணாக, 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் மற்றொரு சுழற்சியைத்  தொடங்கியுள்ளதால், இதன் விளைவாக அல்லது விளைவுகளை அடிப்படையாகக் கொண்ட கண்ணோட்டத்தில் எதுவும் கேட்கப்படவில்லை. இந்த சூழலில், அவை வரவு செலவுத் திட்டத்தின் முடிவு அடிப்படையிலான பொறுப்புக்கூறல் கட்டமைப்பாக மாற்றுவதற்கு எவ்வாறு உதவுகின்றன என்பதைப் பார்க்க எமது பாதீட்டுச் சட்டங்களை மறுபரிசீலனை செய்யப்படுதல் வேண்டும். ஏனென்றால், ஆயிரக்கணக்கான பில்லியன் பொதுப் பணம் மற்றும் பொறுப்புகள் எவ்வாறு செலவிடப்பட வேண்டும் என்பது குறித்தும் முடிவுகள் எடுக்கப்படுதல் வேண்டும்.

 

சமூக ஒருமித்த கருத்து

பொறுப்புக்கூறல் பற்றிய யோசனை ஆட்சியாளர்களுக்கும் (மக்கள் பிரதிநிதிகள்) குடிமக்களுக்கும் இடையில் இருப்பதாக நாம் கருதும் கற்பனையான ‘சமூக ஒருமித்த கருத்து’ என்பதிலிருந்து பெறப்படுகின்றது. ஒருபுறம், நாட்டின் ஆளுகை சட்டத்தின் ஆட்சி அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. மறுபுறம், நிர்வாகத்தின் செயல்திறனையும் விளைதிறனையும் உறுதிப்படுத்த பொறுப்புக்கூறல் அவசியம் என்று நம்பப்படுகிறது. பொறுப்புக்கூறலுக்கும் நிர்வாகத்தின் செயல்திறனுக்கும் இடையே உள்ளார்ந்த தொடர்பொன்று காணப்படுகின்றது.   

அத்தகைய சூழலில், ஒரு நாட்டின் வள ஒதுக்கீட்டின் பயன்பாட்டு அளவை அளவிடுவதற்கான முக்கிய குறிகாட்டியாக முடிவுகள் சார்ந்த அபிவிருத்தி இருக்க வேண்டும். அத்தகைய திசையில், முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட மேம்பாட்டு நிர்வாகத்தை உறுதிப்படுத்த ஐந்து முக்கிய கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. அவை: விளைவு மற்றும் தாக்கம் சார்ந்தவையாகும், அவை ​கூட்டு முடிவுகளை அடைவதற்கான இடைநிலை துறை சார் அணுகுமுறை, உள்ளடக்கத்தன்மை மற்றும் பங்கேற்பு அணுகுமுறை, வெளிப்படைத்தன்மை மற்றும் தகவமைப்பு முகாமைத்துவம் என்பனவாகும்.

சுதந்திரம் கிடைக்கப்பெற்றதன் பின்னர் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்காக இந்நாட்டுக்கு வருடாந்த வரவு செலவுத் திட்டம் மூலம் நிதி ஒதுக்கீட்டுச் செயல்முறை பின்பற்றி வரப்படுகின்றது. இலங்கையின் பாதீட்டுச் செயல்முறை தேசிய சட்டங்கள், சட்டரீதியான வரவு செலவுத் திட்டச் சட்டம் மற்றும் நிதிப் பொறுப்புச் சட்டம்   ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இலங்கையில் வரவு செலவுத் திட்டம் மற்றும் நிதிப் பொறுப்புக்கான சட்ட கட்டமைப்பானது, விளைவுகளை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி முகாமைத்துவத்தை அல்லது பொறுப்புக் கூறலுக்கான விளைவு அடிப்படையிலான அணுகுமுறையை கடைப்பிடிக்க அதிகாரிகள் மீது அத்தியாவசியமான பொறுப்பு விதிக்கப்படவில்லை.

 

தேசிய கொள்கைகள், திட்டங்கள் மற்றும் செயற்திட்டங்களை வகுப்பதில் பொறுப்பாக உள்ள முக்கிய அரச நிறுவனங்களாவன தேசிய திட்டமிடல் திணைக்களம், திட்ட அபிவிருத்தி மற்றும் கண்காணிப்புத் திணைக்களம்  மற்றும் இலங்கையின் நிதி ஆணைக்குழு என்பனவாகும். இந்த நிறுவனங்களுக்கு தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் அபிவிருத்தியைக் கண்காணிப்பதற்கும் மதிப்பீடு செய்வதற்குமான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மட்டங்களில் ஏதேனும் முடிவுகளை அடைவதற்கான எதிர்பார்ப்பு அந்த நிறுவனங்களின் தொலைநோக்கில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பது குறித்து கேள்விக்குரியாக உள்ளது.

 

இலங்கையில், அபிவிருத்திப் பொறுப்பு என்பது பெரும்பாலும் நிதி பொறுப்பு என்றே புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் இந்த அணுகுமுறை விளைவுகளைத் தவிர்க்கிறது; அதாவது, வெளியீடு, முடிவுகள் மற்றும் செலவினங்களின் தாக்கமாகும். நிதி ஒழுங்குவிதி 1 இன் படி, அரசாங்கத்தின் நிதியாண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 ஆம் திகதி தொடங்கி அதே ஆண்டின் டிசம்பர் 31 ஆந் திகதியுடன் முடிவடைகிறது. மேலும் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டிற்கமைய அரச நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் செலவினங்கள் குறித்து குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாவது  அறிக்கையிடப்படல் அவசியமாகும்.

 

நிதி ஒழுங்குவிதி 124 இன் படி, சகல பற்றுச்சீட்டுக்கள மற்றும் கொடுப்பனவுகள் குறித்து பாராளுமன்றத்தில் அறிக்கை செய்வது நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சரின் கடமையாகும். எனவே, திணைக்களத்தின் நிதிக் கொடுக்கல் வாங்கல்களை மேற்பார்வையிடுவதற்கும், அமைச்சின் மேற்பார்வையின் கீழ் உள்ள அனைத்து திணைக்களங்கள் உட்பட அமைச்சின் நிதி நிர்வாகம் போதுமானதாக இருப்பதை உறுதி செய்வதற்கும் ஒவ்வொரு அமைச்சின் செயலாளரையும் தலைமை கணக்கீட்டு அதிகாரியாக அமைச்சர் நியமித்துள்ளார். 

அரசியலமைப்பின் கீழ் உள்ள கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அதிகாரங்கள், பிரதான கணக்களிக்கும் உத்தியோகத்தரினால் தகவல்கள் சமர்ப்பிப்பதற்கு உரித்தான  அமைப்பின் முறைகள், நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் பிற ஆவணங்களை முறையாகவும் போதுமானதாகவும் தயாரித்துள்ளார்களா எனவும் நிதி தொடர்பான பொறுப்புக்கள் மற்றும் அத்தகைய நிதிகளை திறம்பட பயன்படுத்தப்படுகின்றதா என்பது பற்றி ஆய்வு செய்வதனுடன் மாதிதிரம் மட்டுப்படுத்தப்படுகின்றது. இத்தகைய அணுகுமுறையின் மூலம் ஒருவர்  செலவினச் செயல்திறனைப் பற்றி அறிந்து கொள்வதைத் தடுக்கிறது.

2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் பொது நிதி தொடர்பான செயற்குழு அறிக்கையைப் படிக்கும் போது இந்த அணுகுமுறையின் குறுகிய தன்மை மிகவும் தெளிவாகிறது. எடுத்துக்காட்டாக, கல்வி மற்றும் சுகாதார தொடர்பான அறிக்கைகள் மூலம் வழங்கிய பகுப்பாய்வின் ஊடாக  திட்டமிடல், வரவு செலவுத் திட்டத் தொகுப்பு மற்றும் செயல்படுத்துவதில் நமது தேசிய பலவீனங்களை எடுத்துக்காட்டுகிறது.

 

2019 ஆம் ஆண்டில் மத்திய அரசினால் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கிய நிதித் தொகையின் அளவு ரூபா. பில்லியன். 188 ஆக உள்ளதோடு, அது வரவு செலவுத் திட்டத்தில் 5.63% ஆகவும் பொதுவான மொத்த தேசிய உற்பத்தியில் 1.21% ஆகவும் காணப்பட்டது. 2013 ஆம் ஆண்டு முதல், செலவு ஆண்டுக்கு சராசரியாக 11.8% என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளது. மேலும், மதிப்பீடுகள் அதிகப்படியான நன்நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளன.  2013  ஆம் ஆண்டு முதல் 2017 வரை சுகாதாரத் துறைக்கான செலவுகளுக்கு சராசரியாக 13%  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

2019 ஆம் ஆண்டில்  கல்வித் துறைக்கு அரசினால் ஒதுக்கப்பட்ட நிதித் தொகையின் அளவு ரூபா. பில்லியன். 198 ஆக உள்ளதோடு, இது வரவு செலவுத் திட்டத்தில் 5.92% ஆகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  1.27%  ஆகவும் காணப்படுகின்றது.  2013 – 2017 வரையான கால வரையறைக்கான செலவுகள் சராசரியாக 19%  இனால்  அதிகரித்துள்ளது. 

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதித் தொகை ரூபா.பில்லியன். 188 - 198 ஆகும்.  ஆனால் 2017 ஆம் ஆண்டில் இத்துறையின் உண்மையான செலவு ரூபா. பில்லியன். 137 க்கும் குறைவான பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, 2018 ஆம் ஒதுக்கீட்டில் போதுமான அளவு நிதி செலவிடப்பட்டுள்ளதா அல்லது 2019 ஆம் ஆண்டில் அவ்வாறு இருக்குமா என்பதை தீர்மானிக்கும் நிலையில் பொது நிதி தொடர்பான செயற்குழுவுக்கு முடியாமற் போனது. இப்பிரச்சினை கடந்த காலங்களில் பெற்ற அனுபவங்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் உண்மையான கல்விச் செலவுகள் 2013-2017 ஆம் ஆண்டில் சராசரியாக  21% ஆன  ஒதுக்கீட்டைக் குறைத்துள்ளது.   

அபிவிருத்தியின் போது நாம் எதிர்கொண்ட பிணக்குகள் மற்றும் விடய ஆய்வுகள் ஆகிய இரண்டு தொடர்பாகவும் பகுப்பாய்வு செய்வதன் மூலம் நன்கு தெளிவாகின்றது. அபிவிருத்தியில் நாம் பயணிக்க வேண்டிய திசையையும் இலக்கையும் இழந்து விட்டோம். இந்த பாதையைப் பற்றிய அறியாமையின் மற்றொரு எடுத்துக்காட்டு யாதெனில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட மூலதன வரவு செலவுத் திட்டமாகும். மக்களின் சமூக - பொருளாதார நிலையை கட்டியெழுப்பும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வருடாந்தம் ரூபா. மில். 1000 னை ஒதுக்குவதற்கு கொள்கை ரீதியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 2018 ஆம் ஆண்டில் பன்முகப்படுத்தப்பட்ட மூலதனமாக வரவு செலவுத் திட்டத்தில்  ரூபா. மி. 2,250 ன்  ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மாவட்டச்  செயலாளர்களின் மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்காக  ரூபா. மி. 2186.78 ஆன மதிப்புடைய செயற்திட்டங்களுக்கு 17514 ஆன தொகை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  கடந்த இரண்டு தசாப்தங்களில் பன்முகப்படுத்தப்பட்ட மூலதன வரவு செலவுத் திட்டத்திற்காக மாத்திரம் ஒதுக்கப்பட்ட நிதியைக் கணக்கிட்டால், அத் தொகை டிரில்லியன் ரூபா அளவினைக் கொண்டதாக உள்ளது. இருப்பினும், அம் முதலீடுகளினால் ஏற்பட்ட அபிவிருத்திகளின் விளைவுகளையும் தாக்கத்தையும் நாம் ஆராய்ந்தால், அவற்றை அளவிடுவதற்கான தரவை நாங்கள் சேகரிக்கவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, அவற்றின் முடிவுகளை எங்களால் அளவிட்டுப் பார்க்க முடியவில்லை, அவ்வாறு அளவிட்டாலும், இது மிகச் சிறிய தொகையாவே இருக்கும்.   

மேற்கூறிய நிலைமையின் கீழ்  மற்றும் இலங்கை பாரிய நிதி நெருக்கடியில் இருக்கும்போது, செயல்திறன் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ள பாரம்பரிய  கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு செயல்முறை மற்றும் விளைவு அடிப்படையிலான அபிவிருத்தி குறித்த புதிய முன்னுதாரணத்துடன் இணைக்கும் கொள்கையை வகுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இப்புதிய மாதிரி அபிவிருத்திக்குரிய தீர்மானங்களை எடுப்பதற்கான புதிய அணுகுமுறைக்கு வாய்ப்பளிக்கின்றது.

 

 

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Online Library

good information

Jan - 15

Online Library

There are some points that I don't understand in this article, can they be clarified for other articles?

Jan - 15

Online Library

There are some points that I don't understand in this article, can they be clarified for other articles?

Jan - 15