IMG-LOGO
Home கட்டுரை "பொருளாதாரம் பற்றி மக்கள் விழிப்புடன் இருக்கின்றார்களா?"

"பொருளாதாரம் பற்றி மக்கள் விழிப்புடன் இருக்கின்றார்களா?"

Date : 2020-Nov-23
IMG

இந் நாட்களில், உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடிகள் பற்றியும் அதன் வீழ்ச்சி குறித்தும் அதிகமாக பேசப்படுகின்றது.


கொரோனா வைரஸின்  பரவுகையால்,  பெரும்பாலான நாடுகள் அதனைத் தடுக்கும் வகையில் முடக்கப்பட்டுள்ளன (Lock down). ஐரோப்பா இரண்டாவது தடவைாயகவும் முடக்கப்பட்டுள்ளதனை நாம் அனைவரும் அறிவோம். அதன் விளைவாக பொருளாதாரச் செயற்பாடு முழுமையாக சரிவினை எதிர்கொண்டுள்ளது.


இலங்கை போன்ற நாடுகளுக்கு மிகக் குறைந்த தாக்கத்தை இது ஏற்படுத்தி இருந்தாலும், பல அபிவிருத்தியடைந்துள்ள மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் உயர்  உற்பத்தி செயல்முறைகளைக் கொண்ட நாடுகள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  கடந்த ஏப்ரல் / மே மாதங்களில், உலகின் மிக அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான கச்சா எண்ணெய் எதிர்மறையாக (குறைந்த விலையில்)  விற்கப்பட்டது.


அவற்றினைக் கொள்வனவு செய்பவருக்கு டொலர் 13.50 ($13.50) க்கு உற்பத்தி நிறுவனங்களுக்கு செலுத்துவதற்கு உடன்பட்டிருந்தார்கள்.   அதன் கேள்வி குறைந்து  மேன்மிகையிலான இருப்பு திரட்டப்படுவதன் காரணமாக கேள்வி குறைதல் மற்றும்  வைரஸ் பரவலின் காரணமாகவும்  உலகில் அதிகமான விடயங்கள் நடந்தேறின. 


எளிமையாகக் கூறின்,  அமெரிக்கா ஐக்கிய இராச்சியத்தில் மாத்திரம்  வேலை வாய்ப்புக்களை இழந்தவர்களின் எண்ணிக்கை 38 மில்லியனாகும்.  


அது இலங்கையின் ஒட்டுமொத்த சனத்தொகையின் இரு மடங்காகும். கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் அமெரிக்காவில் தங்களது  வேலைவாய்ப்புக்களை  இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.


குறிப்பாக ஹோட்டல், சுற்றுலா, போக்குவரத்து, விமானப் பயணத் துறை, உணவகங்கள், காபி கடைகள், விபச்சாரத் தொழில், மசாஜ் பார்லர்கள், SPA கள் போன்றவற்றில் வேலை இழப்புகளின் எண்ணிக்கை மிக அதிகமாக காணப்படுகின்றன.


அதேபோன்று எளிமையாகச் சொன்னால், இந்தியாவில் தற்சமயம் சுமார் 20 மில்லியன் மக்கள் தங்களது தொழில்களை இழந்துள்ளார்கள். இந்த வேலை இழப்பு என்னும் நோய் மிகவும் மெதுவாகவே குணமடைகின்றது. 


இலங்கையைப் பொருத்தவரையில் இதுவரை தொழில்வாய்ப்புக்களை இழந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்கள் எமக்குத் தெரிவில்லை. பொருளாதாரச் செயற்பாடு அல்லது உற்பத்திச் செயன்முறையின் சரிவு தொடர்பான மிகவும் சிறந்த எடுத்துக்காட்டு என்னவென்றால், முதல் காலாண்டில் இந்தியாவின் உற்பத்தி 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அனைத்து துறைகளிலும் 23.5% வீழ்ச்சியைக் காட்டுகின்றது. 


இங்கிலாந்தில் 21%  உம், அமெரிக்காவில் 15% உம் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை மொத்த தேசிய உற்பத்தியின் வீழ்ச்சியாகக் குறிப்பிட முடியும்.  இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) முதல் காலாண்டில் 1.6% இனால் குறைந்துள்ளது, இது  2020 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட எமது மொத்த தேசிய  உற்பத்தியில் 5% ஆக இருந்தாலும், முதற் காலாண்டில் அது 1.6%  ஆக குறைவடைந்துள்ளது. உற்பத்திகள் குறைவடைந்தால் வருமானம் குறைவடைகின்றது - ஏற்றுமதிகள் குறைவடைகின்றது - அது தனிப்பட்ட வருமானத்திலும் தாக்கம் செலுத்துகின்றது - தொழிலில் இருந்து கிடைக்கப்பெறும் நன்மைகளும் குறைவடைகின்றன.


முழு உலகிலும் தற்சமயம் விமானப் போக்குவரத்துகள் இஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில் - எப்போதாவது ஒரு முறை விமானப் பயணங்கள் செயற்பட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் மதிப்பீட்டின் படி,  முழு உலகிலும் இத்துறையில் 4.8 மில்லியன் பேர் வேலைவாய்ப்புக்களை இழந்துள்ளார்களாம். விமானப் போக்குவரத்துத் துறையில் மாத்திரம் 600,000 பேர் தொழில்வாய்ப்புக்களை இழந்துள்ளார்கள். அது அதிஉயர் சம்பளங்களைப் பெறும் ஊழியர்களாவர்.


விமானப் பயணத் துறையை மீண்டும் அதன் பணிகளை ஆரம்பிக்க ஒவ்வொரு கம்பெனியும் அரசிடம் பாரிய நிதியுதவியைக் கோரி நிற்கின்றது. அத்தொகையை நினைத்துக் கூட பார்க்க முடியாதுள்ளது. அமெரிக்காவில் யுனைடட் நிறுவனம் 6 பில்லியன் டொலரை வேண்டி நிற்கின்றது. அவுஸ்திரேலியாவின் வேர்ஜின் எயார் லைன் நிறுவனம் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில் கிட்டத்தட்ட 30000 ஊழியர்கள் தங்களது தொழில்களை இழந்துள்ளார்கள்.


இலங்கையின் ஸ்ரீ லங்கன் நிறுவனம் இதுவரை தொடர்ந்து வானத்தில் பறந்து கொண்டிருக்கின்றது. எமக்கு அது தொடர்பான புள்ளிவிபரங்கள் கிடைப்பதில்லை. கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி 75 மில்லியன் டொலர் கடன் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


ஸ்ரீ லங்கன் நிறுவனம் ஏற்கனவே அண்ணளவாக 18 பில்லியன் ரூபா நட்டத்தை அடைந்துள்ள ஒரு நிறுவனமாகும். அப்படியாயின் அது மகாவலி திட்டத்தைப் போன்று 4 - 5 திட்டங்களை நிறைவு செய்வதற்குரிய பணத் தொகையின் அளவைக் கொண்டுள்ளது. எனினும் கடந்த வாரத்தின் தேசிய விமானச் சேவையான ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட ஏழாயிரம் (7000) ஊழியர்களுக்கு தன்னார்வ ஓய்வூதியத் திட்ட முறையை அறிமுகப்படுத்துவதற்கு தயார் நிலையில் உள்ளது. இதனை அமைச்சரவையும் அங்கீகரித்துள்ளது.

 

எமது நாட்டின் திறைசேரி மிகுந்த சிரமத்துடன் செயற்பட்டு வருகின்றது. ஒப்பந்தக்காரர்களுக்கு கடந்த இரு வருடங்களுக்கு மேற்பட்ட காலம் வரை பணம் செலுத்தப்பட்டிருக்கவில்லை. மருந்து மற்றும் உர நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வேண்டியுள்ளது.  நேற்று முந்தினம் திறைசேரியானது வணிக வங்கிகளிடம் ஒப்பந்தக்காரர்களுக்கு 9.2 பில்லியன் ரூபாவைச் செலுத்துமாறு  பிணையாக வழங்யுள்ளது. அப்பணத் தொகையை திசெம்பர் மாதம் 31 ஆந் திகதிக்கு முன்னர் அரசுக்கு செலுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாம்  பொருளாதாரத்தில் சரிவு கண்டுள்ள இடம் எதுவெனப் புலனாகின்றது.  


ஒக்டோபர் மாதம் எமது வெளிநாட்டுக் கடனில்  டொலர் பில்லியன் ஒன்று செலுத்தப்பட்டுள்ளதானது - மகிழ்ச்சிக்குரிய செய்தியாகக் காணப்படுகின்றது! அடுத்துவரும் வருடம் முதல் வருடாந்தம் 4 பில்லியன் டொலர் வீதம் செலுத்தப்படல் வேண்டும். எனவே நாம் இப்போது பொருளாதார நெருக்கடியின் வாயலில் இருக்கிறோம்.


ஆகவே,  பொது பொருளாதார பிரச்சினைகள் குறித்து பொது மக்களுக்கு வாரந்தோறும் விழிப்புணர்வுகளை  ஏற்படுத்த நினைக்கிறோம். பொருளாதாரம், நிதி, அபிவிருத்தி, வெளிநாட்டுக் கடன், வேலையின்மை, வட்டி விகிதங்கள் மற்றும் பங்குச் சந்தை குறித்து மக்கள் எளிதாக அல்லது  அறிந்திருப்பது நல்லது.


கடந்த 7 மாதங்கள் தொடக்கம் ஒருசில பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.  இப்போது அதற்கும் ஐரோப்பிய ஆணைச் சபையினால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுவொரு மிக முக்கிய விடயமாக காணப்படுகின்றமையால் முழுமையான அறிவித்தலை கீழே  பிரசுரிக்கின்றோம்.


பிரித்தெடு பகுதி.

 

இலங்கையின் தற்போதைய இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்தாகும்.

 

அரசாங்கத்தின் இறக்குமதி கட்டுப்பாடுகளின் கீழ் தற்போதைய இறக்குமதி கட்டுப்பாடுகள் இலங்கை மற்றும் ஐரோப்பிய வணிகங்களையும் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டையும் மோசமாக பாதிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் (EU) கூறுகின்றது.

 

இதற்குச் சில காலங்களுக்கு  முன்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிக் குழு மற்றும் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ருமேனியா ஆகிய தூதரகங்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இது தெரிய வந்துள்ளது.

 

வர்த்தகம் என்பது ஒரு பாதையில் பயணிக்கக்கூடியது ஒன்றல்ல எனவும்,  தற்போதைய இறக்குமதிக் கட்டுப்பாடுகள் இலங்கை மற்றும் ஐரோப்பிய வணிகங்களையும் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டிலும் மோசமாக பாதிப்புக்களை ஏற்படுத்தும்  எனவும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) எடுத்துக் காட்டுகின்றது.

 

கையாளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக பிராந்திய மையமாக மாறுவதற்கு இலங்கை முன்னெடுக்கும்  முயற்சிகளுக்கு இது ஒரு தடையாக அமையும் எனவும், அவை திரட்டப்பட்ட மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்களை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்துவது இலங்கையின் ஏற்றுமதியை மோசமாக பாதித்துள்ளது எனவும் மேலும் சுட்டிக் காட்டுகின்றது.

 

நீண்ட கால இறக்குமதிகளுக்கான தடை உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு ஏற்புடையதாக இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் (EU) கூறுகிறது.

 

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின்  30/1 ற்கான  தீர்மானத்திற்கு இலங்கை வழங்கிய ஆதரவில் இருந்து வாபஸ் பெறுவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிக் குழுவினால் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையில் உள்ள பல்வேறு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம், நீதி மற்றும் அமைதியான சகவாழ்வை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இப் பிராந்தியத்தில் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயாரான நிலையில் உள்ளது. இது சம்பந்தமாக, சட்ட ஆட்சியும் வலுவான சிவில் சமூகமும் அவசியப்படுகின்றன.

 

தனது சர்வதேச தொடர்புகள் மற்றும் அத்தொடர்புகளுக்கு  ஏற்புடையதாக  இலங்கையுடனான அவர்களின் ஆழமான உறவைத் தொடர விரும்புவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

 

COVID-19 தொடர்ந்தும்  பல சவால்களை முன்வைத்து வருவதால், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் துாதுக் குழுத் தலைவர்களுடனான  தொடர் சந்திப்புக்களை வெளிநாட்டு அமைச்சர்  தினேஷ் குணவர்தன உள்ளிட்ட உயர் மட்ட  அதிகாரிகளுடன்  கொழும்பை தளமாகக் கொண்டு நடாத்தப்பட்டது.

 

உறுப்பு நாடுகளின் இருதரப்பு நிதியுதவிகள் இருந்தபோதிலும், கடந்த 25  வருடங்களினுள் யூரோ பில்லியனுக்கு மேலதிகமான மானியங்கள் உள்ளடங்கலாக, நம்பகமான பங்காளியாக இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கிடைக்கப் பெற்ற  நீண்டகால ஆதரவு பற்றியும் அவர்கள் வலியுறுத்தி நின்றார்கள். 

 

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் முக்கியமான பொருளாதார பங்காளியாக இருப்பதாக அவர்கள் கூறுவதோடு,  மனித உரிமைகள், உழைப்பு, சுற்றுச்சூழல்,  மற்றும் காலநிலை மாற்றம்  போன்ற 27 சர்வதேச மாநாடுகளை தொடர்ந்து நடாத்தியன்  அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP + வரிச்சலுகை காரணமாக, இலங்கை ஐரோப்பா ஒன்றிய சந்தைகளுடனான  போட்டித் தன்மையினைப் போன்றே முக்கியமாக கடமை மற்றும் வரிச்சலுகையுடன் கூடிய இலவச அணுகலை அனுபவிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. 

 

ஐரோப்பிய ஒன்றியம் உலகளவில் இலங்கைக்கான இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையாகும், அத்தோடு  2018 மற்றும்  2019 ஆம் ஆண்டிகளில்  1 பில்லியன் டொலருக்கும் மேற்பட்ட  (ஏறக்குறைய 220  பில்லியன் ரூபா அளவு) நேர்மறையான வர்த்தக இருப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமையானது அது ஒருதலைப்பட்ச ஏற்றுமதி காரணமாக அல்ல என்பதனை அவர்கள் மேலும் தெளிவுபடுத்தினார்கள்.

 

-சேனா சூரியபெருமா-

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *