IMG-LOGO
Home கட்டுரை

கட்டுரை - உள்ளூராட்சி சபைகளில் பெண்கள்

IMG
நளினா பிறேம்லால்
Date : Apr - 25

சிறு பராயம் முதலே உதவி மனப்பான்மையுடன் பெற்றோரின் வழி காட்டலில் சமூக சேவைக்கு உள்வாங்கப்பட்ட நான் நளினா பிறேம்லால். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட நான் நல்லூர் ஆனந்த வித்தியாலயத்தில் கல்வியைக் கற்றதோடு பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைத்த போதும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அது தவற விடப்பட்டதோடு சிறுபராயம் முதலே பெற்றோருடன் சேர்ந்து சமூக வேலைத்திட்டங்களில் ஈடுபட்ட அனுபவங்கள் என்னிடம் ஏராளமாக இருக்கின்றன.

Read More
IMG
ரஞ்சித்ராஜ் குலகௌரி
Date : Feb - 15

வடமாகாணமான யாழ்ப்பாணத்தின் வடமராட்சியை பூர்வீகமாகக் கொண்ட நான் ரஞ்சித்ராஜ் குலகௌரி. தற்போது அரசியலில் பிரவேசித்துள்ள நான் ஆரம்ப காலம் முதலே சமூக சேவைகளில் ஆர்வம் காட்டியதுடன் பாடசாலைக் காலங்களில் விளையாட்டுத்துறையில் ஈடுபாடு உள்ளவராக இருந்திருக்கின்றேன். உயர்தரம் வரை கல்விகற்றதோடு உடல்நிலையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பட்டப்படிப்பை நிறைவு செய்ய முடியாமல் போனது.

Read More
IMG
முகமது இஸ்மாயில் பாத்திமா ரிஹானா
Date : Jan - 24

சமூகப் பணிக்கு பல தடைகள் குறித்து பலரும் பல விதமாக சொன்னாலும் துணிச்சல் இருந்தால் நிச்சயம் மக்களின் தேவைகளை அறிந்து செயற்பட முடியும். இந்தச் சமூகப் பணிக்கு எனது கல்வி பெரிதும் துணையாக இருந்தது என்பதே உண்மை.

Read More
IMG
சந்திரவதனி காந்தராசா
Date : Jan - 10

சமூக சேவைக்கு பல கதவுகள் திறக்கப்பட்டிருக்கின்றன. மக்களின் தேவைகளைக் கண்டறிந்து, அவற்றை நிறைவேற்றிக் கொடுப்பதற்குப் பல வழிகள் உள்ள போதும் அவற்றிலிருந்து விலகியிருக்கின்ற பலருக்கு மத்தியில் சமூக உணர்வுள்ளவர்கள் மக்கள் நலன் சார் விடயங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

Read More
IMG
பவுலினா சுபோதினி
Date : Dec - 21

வட மாகாணத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி பகுதியைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டு, தற்போது அரசியல் ரீதியில் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நான் திருமதி தயாளராஜன் பவுலினா சுபோதினி தற்போது சாவகச்சேரி நகர சபை உறுப்பினராக இருக்கின்றேன்.

Read More
IMG
கந்தையா கலைவாணி
Date : Dec - 18

கந்தையா கலைவாணியாகிய நான் 90 களில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து பிறந்த ஊரை விட்டு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. மகிழ்வட்டவான் பாடசாலையில் எனது ஆரம்பக் கல்வியையும், கரடியனாறு மகாவித்தியாலத்தில் இடைநிலைக் கல்வியையும், சாதாரண தரம் குடியிருப்பு கலைமகள் வித்தியாலயத்திலும் கற்றேன். பின்னர் எதிர்கொண்ட இன்னல்கள் காரணமாக பல பாடசாலைகள் மாற வேண்டி ஏற்பட்டது. அதனால் எனது உயர்தரக்கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டி ஏற்பட்டது. அக்கால கட்டத்தில் எனக்கு சுயதொழில் மீது இருந்த ஆர்வத்தினால் பல பயிற்சி வகுப்புக்க

Read More
IMG
தனுஜா ஜெயராஜா
Date : Dec - 05

யுத்த வடுக்களின் தாக்கம் தமிழ் மக்களை முழுமையாக வீழ்ச்சியடையச் செய்ததோடு அது எம்மையும் விட்டு வைக்கவில்லை. வட மாகாண மக்களுக்கு யுத்தம் தந்த வலிகளும் வடுக்களும் இன்றும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கின்றது.

Read More
IMG
நாகேந்திரன் தர்ஷினி
Date : Nov - 29

நான் நாகேந்திரன் தர்ஷினி. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மத்திய முகாம் பகுதியில் வசிக்கின்றேன். ஆரம்பக் கல்வியை சேனைக்குடியிருப்பு மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை கல்முனையிலும் தொடர்ந்தேன். உயர் தரத்தின் பின் கல்வியை தொடர்ச்சியாக மேற்கொள்ளவில்லை. அதன் பின்னர் மக்கள் சார் தொண்டுப்பணிகளை மேற்கொண்டேன். எனது தந்தை நான் சிறிய வயதிலே இராணுவத்தினால் கைது செய்யப்பட்டார். இன்று வரை அவரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. நானும் தம்பியும் அம்மாவும் மிகவும் சிரமத்திற்கு மத்தியில்

Read More
IMG
மதினி நெல்சன்
Date : Nov - 22

யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட வடுக்கள், தாக்கங்கள், இழப்புக்கள் என்பனவே என்னுடைய அரசியல் பிரவேசத்திற்குக் காணரமாக அமைந்தது.

Read More
IMG
சாமானிய பெண்ணின் சாதனைக் கதை!
Date : Nov - 21

உமாச்சந்திரா பிரகாஷ் ஆகிய நான், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மட்டுவில் என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தவள். ஆரம்பக் கல்வியை மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாசாலையிலும் உயர்தரக் கல்வியை சாவகச்சேரி மகளிர் கல்லூரியிலும் கற்றேன். வட பகுதியில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1996 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து, தலைநகர் கொழும்பில் வாழ நேரிட்டது. ஊடகத்துறையில் டிப்ளோமாக் கற்கை நெறியைக் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தேன். தற்போது கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ‘சட்டமும் ஆட்சியும்’ பாடநெறியைக் கற்று வருகிறேன். 20

Read More