You are currently viewing ரணிலின் மௌனமும் தேர்தல் குறித்து எழுந்துள்ள சந்தேகமும்

ரணிலின் மௌனமும் தேர்தல் குறித்து எழுந்துள்ள சந்தேகமும்

இது தேர்தல் ஆண்டு என்று கடந்த வருடமே அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கூட, தேர்தல்கள் குறிப்பிட்ட காலத்தில் நடக்குமா என்பது தொடர்பான சந்தேகம் இன்னும் நீடிக்கவே செய்கின்றது.அரசமைப்பு ஏற்பாடுகளின்படி, இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டேயாக வேண்டும். அது திட்டமிட்டபடி உரிய காலத்தில் நடக்குமா என்பது பற்றிய சந்தேகம் இன்னும் நாட்டில் வலுவாக நீடிக்கவே செய்கின்றது.

தேர்தல்கள் ஆணையத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு, வாக்குச்சீட்டுகளும் பகுதி அளவில் அச்சான நிலையில், உள்ளாட்சித் தேர்தல் ஒரு வருடத்திற்கு மேலாக நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுவது போல, ஜனாதிபதித் தேர்தலும் கடைசி நேரக் காய் நகர்த்தல்கள் மூலம் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுமா என்ற கேள்வி இப்போது பல வட்டாரங்களிலும் எழுப்பப்படுகின்றது.

அதற்குக் காரணங்கள் உண்டு. இரண்டு தேர்தல்களையும் ஒட்டிக் கட்டவிழும் சில விடயங்கள் நன்கு ஒத்துப் போகின்றன. அதனால் அந்தத் தேர்தலுக்கு (உள்ளாட்சி தேர்தலுக்கு) நடந்த கதிதான் இந்தத் தேர்த லுக்கும் (ஜனாதிபதித் தேர்தலுக்கும்) நடக்கும் என்று சந்தேகிக்க நியாயங்கள் இருக்கவே செய்கின்றன. ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க வேண்டிய உத்தியோகபூர்வ காலத்துக்கு சுமார் மூன்று மாதங்கள் முற் கூட்டியே பொது அறிவித்தல் ஒன்றின் மூலம் அதை வெளிப்படுத்தி இருக்கின்றது தேர்தல் ஆணையம். இது வழமைக்கு மாறான நடவடிக்கை. இப்படித்தான் உள்;ராட்சி தேர்தலுக்கு முன்னரும் உத்தியோகப்பற்றற்ற அறிவிப்பை விடுத்தார்கள் என்று இப்போது சுட்டிக் காட்டுகின்றனர்.

உள்;ராட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் முன்னரே கட்சிகள், அரசியல் தலைவர்கள் எல்லாம் ஆரவாரமாக அந்த ஏற்பாடுகள் – முஸ்தீபுகளில் – தீவிரமாகவும் முனைப்பாகவும் அவரின் அந் தத் தேர்தல் விடயங்களை ஒட்டிய மௌனத்தின் அர்த்தம் புரிந்தது. இப்போதும் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன.

தாம் அந்தத் தேர்தலில் போட்டியிடுவாரா, எந்த அணியில், யாருடன் கூட்டு சேர்ந்து களமிறங்குவார் என்பவை தொடர்பில் அறிவிப்பு எதையும் பகிரங்கமாக வெளிப்படுத்தாமல் – பொது வெளியில் இவ்விடயத்தை ஒட்டி அதீத மௌனம் – அமானுஷ்ய அமைதி – காக் கின்றார் அவர். அதுதான் சந்தேகத்தைக் கிளப்புகிறது.

ஒன்றில் – இந்தத் தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போடும் உபாயத்தை அல்லது திட்டத்தை வகுத்து வைத்துக் கொண்டு, இப்படி விட்டேத்தியாக அவர் நடக்கக்கூடும். அல்லது யாரும் பங்குபற்றட்டும், இத்தேர்தலில் தான் போட்டியிடுவதில்லை என்று அவர் ஏற்கனவே தீர்மானித்திருக்கலாம் என்று சில வட்டாரங்கள் ஊகிக்கின்றன. ஆனால், நரித் தந்திரசாலியான ரணிலுக்கு, வழமையாகவே தேர்தல்களைக் கண்டு அஞ்சி ஓடி ஒளிபவர், தொடை நடுங்கி என்றெல்லாம் விமர்சனப் பெயர் உண்டு.

அத்தோடு அரசியலில் எத்தகைய சகுனித்தனத்தையும் முன்னெடுக்கக் கூடிய சாணக்கியர் என்ற கணக்கும் அவரைப் பற்றி உள்ளது. திட்டமிட்டபடி ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் என்று அவர் அவ்வப்போது குறிப்பிட்டாலும், தேர்தலையொட்டிய தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல், தமது சீட்டுக்களை நெஞ்சுக்கு நெருக்கமாக வைத்து, பிறருக்கு காட்டாமல், பிடி கொடுக்கா மல், அரசியல் சீட்டாட்டத்தை அவர் ஆடிக் கொண்டிருக்கின்றமைதான் பலருக் கும் பலத்த சந்தேகத்தையும் தருவதாக இருக்கின்றது. எந்தக் கட்டத்தில், தமது துரும்புச்சீட் டைத் தூக்கி அடித்து, ஜனாதிபதி தேர்த லுக்கும் எந்த விதத்திலாவது ஆப்பு வைத்து விடுவாரோ என்ற பயம் – பீதி – அரசியல் அச்சம் – பதற்றம் – அரசியல் வட்டாரங்களில் இல்லாமல் இல்லை.