You are currently viewing இலங்கையும் பொறுப்புகூறலும்…!

இலங்கையும் பொறுப்புகூறலும்…!

இலங்கைத் தீவு இன்று இப்படி மோசமான நிலைக்குப் போய் இருக்கின்றது என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது – பொறுப்புக் கூறல் என்ற கடப்பாடு இங்கு இல்லாதமைதான். தேசிய இனப் பிரச்சினையில் இருந்து நாட்டைச் சீரழித்திருக்கும் பொருளாதார நெருக்கடி வரை அனைத்துக்கும் அதுவே காரணம். அதுதான் மிகப் பிரதான காரணம்.

உறுதியான பொறுப்புக் கூறல் பொறிமுறை இல்லாத வரையில் இலங்கையில் ஜனநாயகம் சரிப்பட்டு
வராது என்று ‘வெரிட்டே ரிசேர்ச்’ என்ற ஆய்வு பணியாகத்தின் நிறைவேற்றி இயக்குனர் நிஷான் டி மெல் அடித்து கூறி இருக்கின்றார்.

பொறுப்பு கூறும் கடப்பாடு இல்லாதமையாயால் இலங்கை அரசாங்கம் லாபம் வரும் விடயங்களை தனியார் மயமாக்கி கொண்டு, நட்டங்களை சமூக மயப்படுத்தி (மக்கள் மீது சுமத்தி) வருகின்றது என்று
அவர் சுட்டுவதில் உண்மைகள் – அர்த்தங்கள் – அதிகம் உண்டு.

‘அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களையும் தங்கள் நண்பர்களின் நலன்களையும் முன்னிறுத்தியே முடி வெடுக்கின்றார்கள். அதனால் வளர்ச்சியின் பயனை ஒரு சிறிய குழு அல்லது கூட்டம் அனுபவிக்கின்றது.

அத்தகைய குழுக்கள் மற்றும் தனி நபர்களுக்கு பய னளிக்கும் கொள்கைகளையே அதிகார வர்க்கத்தினர் முன்னெடுக்கின்றனர்’ – என்று சுட்டும் நிஷான் டிமெல் பொறுப்புக் கூறல் கடப்பாடு இன்மையே இங்கு இத்தகைய பொறுப்பற்ற செயற்போக்குக் காரணம் என்பதையும் தெளிவுபடுத்துகிறார். இப்படி ஆளும் தரப்பினரால் அல்லது அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களினால் விடயங்கள் தவறாகக் கையாளப்படும் போது, இழப்புக்களை மக்கள் சுமக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. தவறான கையாள்கைக்கு காரணமானவர்களை அதற்காகப்பொறுப்பு கூற வைக்கும் செயற்பாடு இங்கு இல்லை.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு திட்டத்திலும் அதுதான் நடக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் விடயங்களை இங்கு வழி நடத்துபவர் 1998 முதல் இப்படிக் கடன் பிரச்சினைகளை மறுசீரமைத்த 14
நாடுகளைக் கையாண்டிருக்கிறார். இவ்வாறான பிரச்சினையில் உள்நாட்டுக் கடன் சுமையின் பொறுப்பை
மறுசீரமைப்பின் போது ஊழியர் சோமலாப நிதியம்போன்ற ஓய்வூதியத் திட்டங்களில் சுமத்திய ஒரே
நாடு இலங்கை மட்டும்தான் என்பது அவரது அனுபவம் என நிஷான் டி மெல் குறிப்பிடுகின்றார்.

அதாவது அரசின் தவறான பொருளாதார கையாள் கையால் ஏற்பட்ட சுமையை நலிந்த – பாதிக்கப்பட்டஏழை எளிய – மக்களான மாதாந்த ஊதியம் பெறும் ஊழியர்களின் மீது சுமத்தும் விடயம் இங்கு வெளிப்படையாக அரங்கேறி வருகின்றது. அதற்குக்காரணம் அத்தகைய பொறுப்பற்ற முடிவுகளை
எடுப்பவர்கள் எக்காலத்திலும் அதற்குப் பொறுப்புக் கூறத் தேவையில்லை என்ற பொறுப்பு விலக்களிப்பு
நிலைமைதான். இந்த முறைமையை மாற்றாமல்நாடு திருந்தப் போவதில்லை என்பது திண்ணம்.

சர்வதேச நாணய நிதியம் இங்கு செயற்படும் விதத்திலும் பல ஜனநாயக விரோத அம்சங்கள் நிறைந்துள்ளன. பல முக்கிய விடயங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. பொறுப்புக் கூறல் கடப்பாடும்
கிடையாது. அப்படி இருக்கையில் தனது முயற்சியில்இலங்கை பொருளாதார மீட்சி பெறும் என்று சர்வ
தேச நாணயம் நிதியம் நம்புவது சாத்தியப்படப்போவதில்லை என்பது தெளிவு.