You are currently viewing உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி!

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி!

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று மாலை கூடியது.

இதன்போது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும், வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியும் இணைந்து கூட்டு பத்திரமொன்றை முன்வைத்தனர். இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன,

” உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டத்தை வகுப்பதற்கான அடிப்படைச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2023.01.16 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது.  இதற்காக ஆலோசனைக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.  

இந்நிலையில் குறித்த ஆலோசனைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அடிப்படை வரைபுக்கமைய, சட்ட வரைபொன்றை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள்,

மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.” – என்றார்.

Leave a Reply