You are currently viewing

” அரசியல் ரீதியில் தனக்கு பின்னடைவு ஏற்படும் என்றபோதிலும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக இருக்கின்றார்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். 

” அதிகாரப்பகிர்வு விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பவர்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இதனால் 

சிறுபான்மையின மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் நிலைப்பாடுகளும் மாறிவருகின்றன.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுலாக்க அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றார். இந்த விடயம் தனது அரசியல் செல்வாக்குக்கு சவாலாக அமையும் என்ற போதிலும் சரியான முடிவை எடுப்பதில் அவர் பின்வாங்காமல் உள்ளது.

தமிழ், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தபட வேண்டும். இது அத்தியாவசிய காரணி என ஜனாதிபதி கருதுகின்றார்.” – எனவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டார். 

Leave a Reply