You are currently viewing

දේශපාලන අනුග්‍රාහකවාදය සහ සේවාදායක සම්බන්ධය පිලිබඳ අධ්‍යයනය කවය (Study Group on Political Clientelism – PoCliS) විසින් පවත්වනු ලබන සංවාදාත්මක සන්ධ්‍යාව.

මහාචාර්ය නිහාල් පෙරේරා සමගින් 2023 මාර්තු 30 වන බ්‍රහස්පතින්දා පස්වරු 4:30 ට, ONE-TEXT INITIATIVE හීදී පැවැත්වේ.

 தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு அரசியல் தீர்வை காண வேண்டியது அவசியம்.” – என்று இலங்கையின் முதலாவது பெண் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான சந்திரிக்கா அம்மையார் தெரிவித்தார். 

இலங்கைமன்றக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” எனக்கு இன்று வயதாகிவிட்டது, இளம் வயது முதல் இன்றுவரை இனப்பிரச்சினை பற்றி கதைத்துக்கொண்டிருக்கின்றோம். அப்பிரச்சினைக்கு அரசியலமைப்பு ரீதியில் நிலையானதொரு தீர்வு அவசியம். 

வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்து, அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கினால்போதும், வேறொன்றும் அவசியமில்லை என சிலர் கூறுகின்றனர். இது ஏற்புடையக்கருத்து அல்ல. இவ்வாறான கருத்தை நம்ப வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அவர்களுக்கான (வடக்கு, கிழக்கு மக்கள்) உரிமைகளை ஏன் வழங்க முடியதா? உரிமைகளை வழங்காவிடின் இப்பிரச்சினை தீரப்போவதில்லை. இனப்பிரச்சினையை இனியும் நீடிக்க இடமளிக்ககூடாது. 

13 பற்றி கதைக்க வேண்டாம் என எனக்கு சொல்கின்றனர். அவ்வாறு கதைக்காமல் இருக்கமுடியாது. 13 போதுமென மக்கள் கூறுவார்களாயின் குறைந்தபட்சம் அதை செய்வதற்காவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  நாட்டை நேசிப்பவர்கள் போராடியாவது 13 ஐ அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சந்திரிக்கா அம்மையார் வலியுறுத்தினார்.