You are currently viewing

பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக அரசினால் புதிதாகக் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது சபையில் சமர்ப்பிக்க முடியும் என, சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் நேற்று  எழுப்பிய கேள்வியொன்றுக்கு  பதிலளிக்கையிலேயே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலம்நேற்று முன்தினம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கு இணங்க புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், அந்தச் சட்டமூலம் எப்போது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என ரவூப் ஹக்கீம் எம்.பி.  கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, மேற்படி தகவலை வெளியிட்டார்.