You are currently viewing

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஆதரித்தாலும், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியிலும் சமஷ்டி தீர்வுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவரும், எதிரணி பிரதம கொறடாவுமான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். 

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகையிலேயே  அவர் இவ்வாறு கூறினார். 

”  13 ஆவது திருத்தச்சட்டம் இலங்கை அரசமைப்பின் ஓர் அங்கம். அதனை ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிக்கின்றது. அதேபோல 13 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ், காணி அதிகாரங்கள் தொடர்பில் சர்ச்சை நிலை காணப்படுகின்றது. அனைவரும் பேசி இவ்விரு அதிகாரங்கள் தொடர்பில் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிவந்தால்கூட பொலிஸ், காணி அதிகாரங்கள் தொடர்பில் இணக்கப்பாடு இல்லையேல் அவற்றை அமுல்படுத்த முடியாது. 13 இல் உள்ள ஏனைய விடயங்கள் வழங்கப்படும். அத்துடன், சமஷ்டி தீர்வை நாம் ஆதரிக்கமாட்டோம்.” – எனவும் கிரியல்ல குறிப்பிட்டார்.  

Leave a Reply