You are currently viewing தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தை நிரந்தர நிறுவனமாக ஸ்தாபிக்க அமைச்சவை அனுமதி

தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தை நிரந்தர நிறுவனமாக ஸ்தாபிக்க அமைச்சவை அனுமதி

தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தை (ONUR) நிரந்தர நிறுவனமாக ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நேற்று  நடைபெற்றது.

இதன்போதே இதற்கான அமைச்சரவை யோசனை, நீதி அமைச்சரால் முன்வைக்கப்பட்டு அதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. 

அனைத்துப் பிரஜைகளுக்கும் பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் துறைகளில் சமமான வாய்ப்புக்களை உருவாக்கல், தனித்துவத்தைப் பேணல், பன்மைத்துவத்தைப் பாராட்டுகின்றதும்  மதிப்பளிக்கின்றதமான சமூகத்தை உருவாக்குதல் மற்றும் அனைத்து சமூகங்களும் ஒற்றுமையுடனும்

ஒத்துழைப்புடனும் சேர்ந்து வாழக்கூடிய சமூகமொன்றை உருவாக்கும் நோக்கில் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகம்  ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

குறித்த செயலகத்திற்கு ஒப்படைக்கப்படவுள்ள அதிகாரங்கள் தொடர்பில் கவனம் செலுத்துகையில், அதன் தொழிற்பாடுகளை விரிவாக்கம் செய்வதற்கு சட்டமொன்றின் மூலம் குறித்த செயலகத்தை நிரந்தர நிறுவனமாக தாபிப்பது பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, அதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

Leave a Reply