You are currently viewing நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடைநிறுத்தம்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடைநிறுத்தம்!

நாடாளுமன்றக் கூட்டத்தொடரை எதிர்வரும் 27 ஆம் திகதி இடைநிறுத்துவதற்கு  ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார் என அறியமுடிகின்றது.

அரசியலமைப்பின் 70 (1) உறுப்புரிமைக்கமைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இடைநிறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.

அவ்வாறு நாடாளுமன்றம் இடைநிறுத்தப்படும் நாளில் இருந்து இரண்டு மாதங்களுக்கு மேற்படாத வகையில் புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாக வேண்டும். அதற்கான திகதியும் குறித்தொகுக்கப்பட வேண்டும்.  

இதற்கமைய புதிய கூட்டத்தொடர் பெப்ரவரி 8 ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரியவருகின்றது.

நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டு, புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும்போது ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை இடம்பெற வேண்டும். ஜனாதிபதியே சம்பிரதாயப்பூர்வமாக சபை அமர்வை ஆரம்பித்து வைப்பார். இதன்படி அரசின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான கொள்கை திட்டத்தை ஜனாதிபதி முன்வைப்பார்.

அதேபோல நாடாளுமன்றத்தில் தற்போது இயங்கும் கோப், கோபா உள்ளிட்ட குழுக்கள் செயலிழக்கும். புதிய கூட்டத்தொடரின் பின்னர் புதிய குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும்.

Leave a Reply