You are currently viewing உள்ளூர் பொறிமுறையை ஏற்படுத்த அமைச்சரவை அனுமதி!

உள்ளூர் பொறிமுறையை ஏற்படுத்த அமைச்சரவை அனுமதி!

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதற்கும், மீளிணக்கப் பொறிமுறை தொடர்பான கொள்கையை அமுலாக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.

இதன்போதே மேற்படி யோசனை கூட்டு அமைச்சரவைப் பத்திரமாக முன்வைக்கப்பட்டு, அனுமதி பெறப்பட்டுள்ளது.

போருக்கு பின்னர் ஏற்பட்டுள்ள சமாதானத்தை முற்கொண்டு செல்லுவதற்கும், பாதுகாத்துக்கொள்வதற்கும் அர்த்தமுள்ள வழிமுறையாக உண்மையைக் கண்டறியும் சுயாதீனமான, உள்ளூர் பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் மீளிணைப்புப் பற்றித் தேடி ஆராய்வதற்காக இலங்கையில் சுயாதீன ஆணைக்குழுக்கல் சில தாபிக்கப்பட்டுள்ளன.

குறித்த ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள உண்மையைக் கண்டறிதல் மற்றும் மீளிணக்கப் பொறிமுறை தொடர்பான கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பாக  ஜனாதிபதி,  பிரதமர், கடற்றொழில் அமைச்சர், கல்வி அமைச்சர், நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர், மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இணைந்த சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply