உள்ளாட்சி தேர்தல் – மனுக்கள்மீதான விசாரணை ஜனவரி 18 இல்!

இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களுக்கு அமைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதமின்றி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுப்பதற்கு உயர்நீதிமன்றம் நாள் நிர்ணயித்துள்ளது.

இதன்படி,  இரண்டு மனுக்களும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி, குறித்த இரண்டு மனுக்களையும் ஜனவரி மாதம் 18ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

உள்ளூராட்சிசபைத் தேர்தலை உரிய காலப்பகுதிக்குள் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறுகோரி உயர்நீதிமன்றத்தில் டிசம்பர் 18 ஆம் திகதி இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார , சுதந்திர மக்கள் சபையின் உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் இணைந்து முதலாவது  மனுவையும்,

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், தயாசிறி ஜயசேகர, லக்‌ஷ்மன் கிரியல்ல, அநுர பிரியதயாப்பா ஆகியோர் இணைந்து இரண்டாவது மனுவையும் தாக்கல் செய்தனர்.

தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள், பிரதமர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் மேற்படி மனுக்கள் , உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் முன்னிலையில் இன்று பரீசிலனைக்கு வந்தபோதே, 18 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, உள்ளாட்சிமன்ற தேர்தல் தொடர்பான அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு டிசம்பர் இறுதி வாரத்துக்குள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

2023 மார்ச் 20 ஆம் திகதிக்குள் புதிய சபைகள் நிறுவப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply