You are currently viewing ஒற்றையாட்சிக்குள்தான் அதிகாரப்பகிர்வு – சஜித் திட்டவட்டம்

ஒற்றையாட்சிக்குள்தான் அதிகாரப்பகிர்வு – சஜித் திட்டவட்டம்

 ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில், ஒற்றையாட்சிக்குள் அனைத்து இன மக்களும் ஐக்கியமாக வாழும் வகையில் அதிகாரப்பகிர்வு இடம்பெறும் – ”  என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் மாநாடு கொழும்பு,பொரளை கெம்பல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சஜித் இவ்வாறு கூறினார். 

அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிகொள்வதற்கான போராட்டம் தொடரும் எனவும் அவர் கூறினார்.

” மாற்றம் கோரிய மக்கள் போராட்டம் இன்னமும் ஓயவில்லை. நாட்டுக்காக போராடியவர்கள் சிறைகளில் உள்ளனர். அவர்களுக்காக நாம் முன்னிலையாவோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு போராடுவோம். அதற்கு பதிலாக தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான உரிய சட்டங்கள் கொண்டுவரப்படும்.  

காணாமல் ஆக்கப்பட்ட பிரகித் என்கெலி கொட, படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்க பற்றி எவரும் கதைப்பதில்லை. அவர்களின் குடும்பங்களுக்கு நிச்சயம் நீதியை பெற்றுக்கொடுப்போம். கொள்ளை அடிக்கப்பட்ட பணம் எமது நாட்டுக்கு மீள கொண்டுவரப்படும்.

விரைவில் உள்ளாட்சிசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. நாட்டு மக்கள் ஒன்றுசேர வேண்டும். ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்க, எமது வெற்றி அலையை ஆரம்பித்து வைக்க வேண்டும்.” – எனவும் சஜித் கூறினார். 

Leave a Reply