You are currently viewing சம்பந்தனும், ரணிலும் இணைந்து அரசியல் தீர்வை காண வேண்டும்

சம்பந்தனும், ரணிலும் இணைந்து அரசியல் தீர்வை காண வேண்டும்

” தமிழ் தேசியக் கட்சிகளுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும்,  தமிழ் மக்களின் எதிர்காலத்தை இல்லாமல் செய்வதற்கு அவை தயாரில்லை. எனவே, சமஷ்டி தீர்வை வென்றெடுக்க தமிழ் தேசியக் கட்சிகள் நிச்சயம் ஒன்றுபடும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

எத்தனை வருடங்கள் சென்றாலும், எவ்வளவு தடைகள் வந்தாலும் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க தமிழ் சமூகம் பீனிக்ஸ் பறவைபோல மீண்டெழுந்துகொண்டே இருக்கும் எனவும் அவர் சூளுரைத்தார்.

 ” இது கார்த்திகை மாதம், எங்கள் மண்ணுக்காகவும், இனத்துக்காகவும், அரசியல் உரிமைகளுக்காகவும் போராடி மரணித்த, வீரச்சாவடைந்த எங்களுடைய மாவீரர்களை நினைவுகூருகின்றேன்.

அரசியல் தீர்வுக்காக தமிழரசுக்கட்சி 75 ஆண்டுகளாக போராடிவருகின்றது. தீர்வுக்காக தமிழ் சமூகம் பீனிக்ஸ் பறவைபோல மீண்டெழுந்துகொண்டுதான் இருக்கும். அதுபோலவே தமிழரசுக்கட்சியும். தீர்வுக்காக தொடர்ந்து போராடும். எதிர்காலத்தில் சம்பந்தன்கள் உருவாகலாம், சாணக்கியர்கள் உருவாகலாம். இலக்கை அடையும்வரை போராட்டம் ஓயப்போவதில்லை.

தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு பற்றி பாதீட்டில் உறுதிமொழி இல்லை. சர்வதேசத்தை ஏமாற்ற முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். சம்பந்தன் – விக்கிரமசிங்க ஒப்பந்தம் ஊடாக நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.

தமிழ் தேசியக் கட்சிகளுக்கிடையில் கருத்து முரண்பாடு இருக்கலாம். ஆனால் சமஷ்டி தீர்வுக்காக நாம் ஒன்றாக நிற்போம். தமிழ்க் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை இல்லை என சிலர் விமர்சிக்கலாம். ஆனால் தமிழர்களின் எதிர்காலத்தை நாம் இல்லாமல் செய்யமாட்டோம். மக்களுக்காக நிச்சயம் ஒன்றுபடுவோம்.” – என்றும் சாணக்கியன் குறிப்பிட்டார்.

Leave a Reply