You are currently viewing பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளாய்வு செய்ய விசேட குழு

பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளாய்வு செய்ய விசேட குழு

பயங்கரவாத தடைச்சட்டத்தினை மீளாய்வு செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதனடிப்படையில், தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாகமீளாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவானது, அமுலில்உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் பற்றி பல்வேறு தரப்பினருடன் இணைந்தும், தனியாகவும் ஆய்வுகளை நடத்தவுள்ளது.

அதன்பிரகாரம், விரைவில் அறிக்கையொன்றை தயாரித்து சமர்ப்பிக்கவுள்ளது. குறித்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதேநேரம், தீவிரவாதத்தினை தடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திற்கும் தீவிரவாதம் பெரும் சவாலாகி வருகையில் அதனை கட்டுப்படுத்துவதற்கும் வலுவான சட்ட ஏற்பாடுகள் அவசியமாகின்றன.

அந்த அடிப்படையில் அதுபற்றிய கரிசனைகளும் வெகுவாகச் செலுத்தப்பட்டுள்ளது எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார். 

Leave a Reply