இரட்டைக் குடியுரிமை உடைய நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்டறிவதற்கான சட்டப்பூர்வ பொறிமுறையொன்று அரசாங்கத்திடம் இல்லை – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது இரட்டை குடியுரிமை உடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
” நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தின் பிரகாரம், இரட்டைக் குடியுரிமை உடையவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது.
அதேபோல இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் யாரென கண்டுபிடிப்பதற்கான சட்டப்பூர்வமான பொறிமுறையும் அரசாங்கத்திடம் இல்லை. நீதிமன்றம் ஊடாகவே இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
