You are currently viewing நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமைச்சரவை உப குழு ஸ்தாபிப்பு!

நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமைச்சரவை உப குழு ஸ்தாபிப்பு!

வடக்கு, கிழக்கில் நிலவும் மீள்குடியேற்றம், காணி மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பான  பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கும் நோக்கில் அமைச்சரவை உப குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி தலைமையிலான இக்குழுவில் பிரதமர் தினேஷ் குணவர்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  

வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே ‘நல்லிணக்கம் தொடர்பான அமைச்சரவை உப குழுவை’ அமைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி முன்வைத்துள்ளார். இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  

இலங்கையில் வாழும் பல்லின மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதும், 

வடக்கு, கிழக்கு போருக்கு பின்னரான மீள் குடியேற்றம்,  காணி மற்றும் காணாமல் போனார் விவகாரம் தொடர்பில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதுமே குழுவின் பிரதான பணியாகும்.

இக்குழுவுக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மேலும் இரு அமைச்சர்களை எதிர்காலத்தில் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 

Leave a Reply