இழுபறி நிலையில் உள்ள அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கான நாள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மேற்படி சட்டமூலம்மீதான இரண்டாம் வாசிப்பிற்குரிய விவாதத்தை எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற, நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
22 ஆவது திருத்தச்சட்டமூலம்மீது நேற்றும், இன்றும் விவாதம் நடத்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தீர்மானம் நேற்று திடீரென பிற்போடப்பட்டது.
அதேவேளை, 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட வரைபு தொடர்பான முதலாம் வாசிப்பை எதிர்வரும் 18 ஆம் திகதி நடத்துவதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
