‘கோப்’ எனப்படுகின்ற அரசாங்க பொறுப்புகள் பற்றிய குழுவுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
சபாநாயகர் அறிவிப்புவேளையின்போதே கோப் குழுவுக்கான உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் அறிவித்தார்.
இதன்படி ஜகத் புஷ்பகுமார, ஜாகன வக்கும்புர, லொஹான் ரத்வத்தே, இந்திக்க அனுருத்த ஹேரத் ,டி.வீ. சானக, சாந்த பண்டார ,அநுர குமார திஸாநாயக்க, ரவூப் ஹக்கீம், பாட்டளி சம்பிக்க ரணவக்க, மஹிந்தானந்த அலுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, ஹர்ஷ டி சில்வா, இரான்
விக்கிரமரத்ன – ஆகியோரும்
நிமல் லான்சா, முஸ்ஸாரப், நலீன் பண்டார ஜயமஹா, எஸ்.எம். மரிக்கார், முஜிபூர் ரஹ்மான், ரோஹினி குமாரீ விஜேரத்ன, சஞ்சீவ எதிரிமான்ன, பிரேம்நாத் சி தொலவத்த, உபுல் மகேந்திர ராஜபக்ச, இரா. சாணக்கியன், ராஜிகா விக்கிரமசிங்க, மதுர விதானகே. ரஞ்சித் பண்டார் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
எனினும், கோப் குழுவின் தலைவர் இன்னும் பெயரிடப்படவில்லை. அப்பதவியை எதிரணி கோரி இருந்தாலும் அது தொடர்பில் அரசின் முடிவு இன்னும் வெளியாகவில்லை.
அத்துடன், கோப் குழுவின் தலைவராக செயற்பட்ட சரித ஹேரத் தற்போது டலஸ் அணியில் உள்ளார். இதனால் கோப் குழுவுக்கு இம்முறை அவரின் பெயர்கூட உள்வாங்கப்படவில்லை.
