You are currently viewing 22 தொடர்பில் இரு நாட்கள் விவாதம்!

22 தொடர்பில் இரு நாட்கள் விவாதம்!

அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்படவுள்ளது. 

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவின் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அவரின் அலுவலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது.  

இதன்போதே 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை மேற்படி நாட்களில் விவாதத்துக்கு எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் மாதத்துக்கான முதல்வார நாடாளுமன்ற அமர்வு 3 ஆம் திகதி ஆரம்பமாகி, 7 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தி, நாடாளுமன்றத்துக்கும் அதிகாரங்களை பகிரும் வகையில் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.

19 மற்றும் 20 ஆவது திருத்தச்சட்டங்களில் இருந்த சிறந்த அம்சங்களை உள்ளடக்கியே 22 தயாரிக்கப்பட்டுள்ளது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

Leave a Reply