ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையானது இந்தியாவின் ஆதரவை வெல்லும் பட்சத்தில் மேலும் 10 நாடுகள் இலங்கை பக்கம் சாயும்.” – என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், அரசியல் ஆய்வாளருமான பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கை தொடர்பான பிரேரணை ஒக்டோபர் 07 ஆம் திகதி வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும். 47 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கும். இதில் 23 அல்லது 24 நாடுகளின் ஆதரவை திரட்டினால், பிரேரணையை இலங்கையால் தோற்கடிக்க கூடியதாக இருக்கும்.
இலங்கை வெற்றிபெற வேண்டுமானால் அதற்கு இந்தியாவின் ஆதரவு மிக முக்கியம். இலங்கைக்கு சார்பாக இந்தியா வாக்களித்தால் மேற்குலகம், ஆபிரிக்கா, கரீபியன் தீவுகளில் உள்ள சுமார் 10 நாடுகள் இலங்கைக்கு நேசக்கரம் நீட்டும். இந்தியா நடுநிலை வகித்தால், பிரேரணை நிறைவேறும்.
இலங்கையானது உள்ளக பொறிமுறை யோசனையை முன்வைக்க வேண்டும். 10 ஆண்டுகால மனித உரிமை திட்டத்தை அமுலாக்க வேண்டும். ” – என்றார்.
