You are currently viewing IMF இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தை பகிரங்கப்படுத்துமாறு வலியுறுத்து

IMF இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தை பகிரங்கப்படுத்துமாறு வலியுறுத்து

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஊழியர் மட்ட  இணக்கம் தொடர்பான ஒப்பந்தத்தை பகிரங்கப்படுத்துமாறு, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. 

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.   இதன்போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, 

” தற்போதைய ஜனாதிபதி எதிரணி எம்.பியாக இருந்தபோது சர்வதேச நாணய நிதியம் தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தியிருந்தார். சர்வக்கட்சி மாநாட்டின்போதும், நாடாளுமன்றத்தில் வைத்தும் அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். ஏனெனில் நாடாளுமன்றத்துக்கே நிதி அதிகாரம் உள்ளது. 

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை முன்மாதிரியாகக் கருதி, சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஊழியர் மட்ட  இணக்கம் தொடர்பான ஒப்பந்தத்தை சபையில் முன்வைத்து, பகிரங்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். அப்போதுதான் அவை தொடர்பில் ஆராயக்கூடியதாக இருக்கும். முடிந்தால் நாளையே சமர்பபிக்கவும். ” – என்றார்.