ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் இடைக்கால வரவு – செலவுத் திட்டம், நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.
இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது பாதீட்டுக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக ஐந்து வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி மேலதிக 115 வாக்குகளால் இடைக்கால பாதீடு நிறைவேற்றப்பட்டது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்கட்சி உட்பட ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவாகவும், தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பவற்றின் உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் டலஸ் ஆதரவு அணி உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம, பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தார்.
