You are currently viewing இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்களை வழங்க இணக்கம்

இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்களை வழங்க இணக்கம்

2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஆரம்பக்கட்ட இணக்கத்துக்கு வந்துள்ளது.  

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் மட்டத்திலான பிரதிநிதிகள், ஜனாதிபதி உட்பட இலங்கையின் முக்கிய தரப்புகளுடன் பேச்சுகளை நடத்தினர்.

இதன்போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே கடன் வழங்க, ஆரம்பக்கட்ட – அதாவது அதிகாரிகள் மட்டத்திலான இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு, தமது பொருளாதார திட்டங்களை மீளமைத்துக்கொள்வதற்காக 48 மாத காலத்துக்கே இக்கடன் வழங்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகாரிகள் மட்ட இணக்கம் எட்டப்பட்டுள்ளதை பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று நாடாளுமன்றத்திலும் அறிவித்தார். அடுத்ததாக நிறைவேற்று குழு மட்டத்திலான பேச்சுகள் இடம்பெறும் எனவும் குறிப்பிட்டார். 

Leave a Reply