இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அதற்கான நிகழ்வுகளை ஒழுங்குப்படுத்துவதற்காக அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் 2023 பெப்ரவரி 04 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில், சுதந்திரதின விழா நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக மற்றும் வழிநடாத்துவதற்காக கீழ்க்காணும் கட்டமைப்புடன் கூடிய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்காக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்த குழுவில், பிரதமர், பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், கடற்றொழல் அமைச்சர், கல்வி அமைச்சர், வெளிவிவகார அமைச்சர், ஊடகத்துறை அமைச்சர், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
அதேவேளை, சுதந்திர தின நிகழ்வின் இறுதியில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
