You are currently viewing அறவழி போராட்டக்காரர்களை ஒடுக்குவது அடிப்படை மனித உரிமை மீறலாகும்’

அறவழி போராட்டக்காரர்களை ஒடுக்குவது அடிப்படை மனித உரிமை மீறலாகும்’

 போராட்டங்களில்  ஈடுபடும் உரிமையும்,  சுதந்திரமும் மக்களுக்கு உள்ளது. அந்த ஜனநாயக உரிமையை சவாலுக்குட்படுத்துவது அடிப்படை மனித உரிமைமீறல் மற்றும் ஜனநாயக விரோதச்செயலாகும் .” – என்று  எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

எனவே, வன்முறையின்றி அறவழியில் போராடியவர்கள்மீது அரசு கைவைக்கக்கூடாது எனவும், அவர்களுக்காக தான் முன்னின்று செயற்படபோவதாகவும் அவர் அறிவித்தார். 

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கொழும்பில் இன்று ஊடாக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தன.

ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி,  ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சுயாதீன அணிகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றிருந்தனர். 

இதன்போது கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித், கைது வேட்டை நிறுத்தப்பட வேண்டும் எனவும் இடித்துரைத்தார்.

சுமந்திரன் எம்.பி.

போராட்டக்காரர்களுக்கு எதிரான கைது வேட்டையை,  அடக்குமுறையை அரசு உடன் நிறுத்த வேண்டும் 

அவ்வாறு இல்லாவிட்டால் மக்களுடன் இணைந்து பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்தார். 

தொழிற்சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் உட்பட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாகவும், போராடும் உரிமையை எவரும் தடுக்க முடியாது எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.  

அத்துடன்,  ஜனநாயகத்தை விரும்பும் ரணில், ஜனநாயக விரோதச் செயலில் இறங்கக்கூடாது என தமிழ் முற்போக்கு கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply