ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் இடைக்கால வரவு – செலவுத் திட்டம் அடுத்த மாதத்துக்குள் முன்வைக்கப்படவுள்ளது.
இந்தத் தகவலை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
பஸில் ராஜபக்ச நிதி அமைச்சராக இருந்தபோது முன்வைத்த வரவு – செலவுத் திட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அதற்கான யோசனைகளும் இடைக்கால பாதீட்டில் உள்ளடக்கப்படும்.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் பாதீடு சபையில் சமர்ப்பிக்கப்படும்.
