தற்போதைய நெருக்கடிநிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை காண்பதற்கு அனைத்து நாடாளுமன்ற பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.”
இவ்வாறு மதத்தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே சமயத்தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தினர்.
” சகல தமிழ்க் கட்சிகளும் குறிப்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விரைவில் ஒன்று கூடி இன்றைய இலங்கை அரசியல் சூழலில் எடுக்கவேண்டிய தீர்மானம் என்ன என்பதை சீராகத் தீர்மானிப்பதற்கு முன் வரவேண்டும்.
வடக்கு-கிழக்கு,மலையகம், தெற்கு என்ற பேதமின்றி தமிழ் நாடாளுமன்ற அங்கத்தவர்கள், கட்சித் தலைவர்கள் வேறுபாடுகளைக் கடந்து மக்களுக்காக ஒன்று கூடவேண்டிய தருணம் இது. எனவே அறிவு பூர்வமாக தீர்க்க தரிசனத்தோடு ஒன்றுகூடி ஆராயுங்கள்.இ து காலத்தின் கட்டாயம். இவ்வேளை நீங்கள் ஒன்றுகூடி ஆராய மறுப்பீர்கள் ஆனால் அது மாபெரும் வரலாற்றுத் தவறாகும்.” – என்றும் மதத்தலைவர்கள் சுட்டிக்காட்டினார்.
இவ் ஊடக சந்திப்பில் நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர பரமாச்சார்ய சுவாமிகள், யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட் ஞானப்பிரகாசம், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன், ரிஷி தொண்டுநாத சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
