நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு பொறுப்புள்ள கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தி தீவிரமாக செயற்படும்.
ஜனாதிபதி பதவிக்கு சஜித் பிரேமதாசவை பெயரிடுவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்க்கின்றோம்” – என்றும் திஸ்ஸ அத்தநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.
நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பொது வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த வேண்டும், அது வெற்றிகரமாக முடிவடைந்த பின்னர் பொதுத்தேர்தலுக்கு செல்ல முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்திக்கும், ஶ்ரீலங்கா பொதுஜனபெரமுனவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறுகின்றது. இடதுசாரி கட்சிகளும் இதில் பங்கேற்றுள்ளன.
