You are currently viewing சர்வக்கட்சி அரசமைப்பதற்கான பேச்சுகள் முன்னெடுப்பு!

சர்வக்கட்சி அரசமைப்பதற்கான பேச்சுகள் முன்னெடுப்பு!

சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்காக எதிரணிகளை ஓரணியில் திரட்டி – பொது நிலைப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன. 

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பங்களிப்புடனேயே இதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன. 

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.ஜே.வி.பி. உறுப்பினர்களைதவிர, எதிரணி மற்றும் சுயாதீன அணிகளின் 37 உறுப்பினர்கள்வரை இச்சந்திப்பில் பங்கேற்றுள்ளனர். 

அத்தியாவசிய பொருட்களை தடையின்றி விநியோகித்தல், 19 ஐ மீள செயற்படுத்தல் உட்பட முக்கிய சில விடயங்களை நிறைவேற்றுவதற்காகவே சர்வக்கட்சி அரசு அமையவுள்ளது. 

இதற்கு ஆரம்பக்கட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இன்றும் பேச்சுகள் தொடரவுள்ளன. 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால்தான் சர்வக்கட்சி அரசமைப்பதற்கான 113 என்ற அறுதிப்பெரும்பான்மையை பெறலாம். எனவே, மொட்டு கட்சி உறுப்பினர்களுடனும் சந்திப்புகள் இடம்பெறவுள்ளது.

Leave a Reply