இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைக்குழுவொன்று, கந்தக்காடு புனர்வாழ்வு முகாமுக்கு இன்று (01) கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளது.
குறித்த முகாமில் ஏற்பட்ட நிலைவரம் தொடர்பில் அதிகாரிகளிடமும், கைதிகளிடமும் வாக்குமூலம் பெறுவதற்கும், உண்மையை கண்டறியும் நோக்கிலுமே குறித்த குழுவின் விஜயம் அமையுவுள்ளது.
கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில், புனர்வாழ்வளிக்கப்பட்டுவரும் கைதிகளில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 600 இற்கும் மேற்பட்ட கைதிகள் கைதிகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அவர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையில் ஆரம்பமானது. தப்பிச்சென்றவர்களில் 653 பேர் சரணமடைந்துள்ளனர். எஞ்சிய 70 பேரை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் தொடர்கின்றது.
புனர்வாழ்வு மையத்தில் கொழும்பு, மோதரை பகுதியை சேர்ந்த இளைஞர், அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் என சக கைதிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தமது உரிமைகள் மீறப்படுவதாகவும், அடக்கி ஆளப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
