You are currently viewing ’13’ அமுலில் இருக்கும்வரை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர வேண்டும்

’13’ அமுலில் இருக்கும்வரை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர வேண்டும்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் அமுலில் இருக்கும்வரை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தக்கூடாது – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். 

அத்துடன், 19 ஐ அடியொட்டியதாக முன்வைக்கப்படும் 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தான் ஆதரிக்க போவதில்லை எனவும் அவர் அறிவித்தார்.  

” புதிய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தவே ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை வழங்கினர். இது தொடர்பில் நிபுணர்கள் குழுவின் அறிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 21 தேவையற்றதொன்றாகும்.” – என்று நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.   

” இலங்கையில் 52 வீதமான தமிழ் மக்கள், சிங்களவர்கள் மத்தியில்தான் வாழ்கின்றனர். எனவே, சிங்கள மக்களுக்கும் தாம் விரும்பிய இடத்தில் வாழும் உரிமை உள்ளது. எனினும், முடியாது எனக்கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனவாதம் பரப்புகின்றனர். இதனை அனுமதிக்க முடியாது.” – எனவும் அவர் இடித்துரைத்தார்.