21ஆவது திருத்தச்சட்ட மூலம் சம்பந்தமாக ஆராய்ந்து முடி வொன்றை எட்டுவதற்காக தமிழ்க் கட்சிகள் இன்று கூடவுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு வவுனியாவில் கூடவுள்ளது.
அதேவேளையில், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் இன்று மாலை 6 மணிக்கு மெய்நிகர் வழியில் கூடிப் பேசவிருக்கின்றன.
முன்னதாக, முன்மொழியப்பட்ட அரசமைப்பின் 21ஆவது திருத்தச்சட்ட மூலம் சம்பந்தமாக கலந்துரையாடுவ தற்காக தமிழரசுக் கட்சி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ் மக்கள் கூட்டணி,
தமிழ்த் தேசியக் கட்சி ஆகியன மெய்நிகர் வழியில் கூடிப் பேசியிருந்தன.
இதன்போது, தற்போது அரசமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தம் குறித்து
தமிழர் தரப்பு விசேட கரிசனை செலுத்த வேண்டுமா, அதில் எவ்விதமான வகிபா கத்தினைச் செய்வது என்பன தொடர்பில் அவை ஆராய்ந்திருந்தன.
இந்த நிலையில், பிரதமர் ரணில் தலைமையில் இரண்டாவது கூட்டம் நடத் தப்படவிருந்தமையால் அது நிறை வடையும் வரையில் தமிழ்க் கட்சிகளும்
தமது கூட்டத்தினைத் தாமதத்திருந்தன.
பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் எவ்வாறான இணக்கப்பாடுகள் எட்டப்ப டுகின்றன என்பதை அவதானித்த பின்னர் அடுத்தகட்டமான செயற்பாடுகளை முன்னெடுப்பதென அப்போது தீர்மா னித்திருந்தன.
பிரதமர் ரணில் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் அரசியல் கட்சித் தலை வர்கள் 21 ஆவது திருத்தம் குறித்து பொது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளநிலையில், தமிழ்க் கட்சிகளும் தமது இறுதியான நிலைப்பாட்டினை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியி ருக்கும் கூட்டமைப்பு எம்.பிக்களான சிறீ தரன், சுமந்திரன், சித்தார்த்தன் ஆகி யோரும் மன்னாரில் தங்கியிருக்கும் செல்வம் உட்பட ரெலோ உறுப்பினர்களும் நாளை நடைபெறும் நாடாளுமன்ற கூட் டத்தில் பங்கு பெறுவதற்காக இன்று பிற் பகலில் கொழும்பு பயணமாகிறார்கள்.
அந்த பயணத்தின் வழியில், இன்று பிற்பகல் 3 மணிக்கு வவுனியாவில் ஒன்று கூடி 21 ஆவது திருத்தம் குறித்து தங்க ளுக்குள் கலந்துரையாட ஏற்கனவே அவர்கள் முடிவு செய்திருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் செயலாளரும் பங்குபற்றக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு சிறீதரன், சுமந்திரன் போன்றோர் கொழும்பு பய ணமாவார்கள். அதனால் இன்று மாலை 6 மணிக்கு ஏனைய தமிழ் கட்சிகள்
சேர்ந்து மெய்நிகரில் ஒன்றுகூடி கலந்து
ரையாட ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்தில்
அவர்கள் பங்குபற்ற மாட்டார்கள் எனத்
தெரிகிறது.
