You are currently viewing ’21’ ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான நிபுணத்துவ கலந்துரையாடல்!

’21’ ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான நிபுணத்துவ கலந்துரையாடல்!

அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான நிபுணத்துவ கலந்துரையாடலொன்று கொழும்பு, 05 இல் உள்ள ஜானகி ஹோட்டலில் (2022.06.01) அன்று நடைபெற்றது. 

‘One Text Initiative’ நிறுவனத்தால் குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், சட்டத்தரணியுமான கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா, சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.  

அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் இதில் கலந்துகொண்டனர். 

இதன்போது 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அதிலுள்ள குறைபாடுகளும் பட்டியலிடப்பட்டன. அதேபோல 21 ஐ வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கான யோசனைகளும் முன்வைக்கப்பட்டன.   

Leave a Reply