You are currently viewing ‘தேசிய நிறைவேற்று சபை உருவாகும்’ – 21 ஆவது திருத்தச்சட்டமும் விரைவில்

‘தேசிய நிறைவேற்று சபை உருவாகும்’ – 21 ஆவது திருத்தச்சட்டமும் விரைவில்

“ நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய வகையில் தேசிய நிறைவேற்று சபையொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் உறுதியளித்தார். விரைவில் வரவு-  செலவுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கும் அவர் தயாராகிவருகின்றார்.” 

இவ்வாறு 10 கட்சிகள்  கூட்டணியின் பங்காளியான பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார்.  

சர்வக்கட்சி அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறுகோரி 10 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடிதம் அனுப்பியிருந்தார். 

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக 10 கட்சிகளின் பிரதிநிதிகள், இன்று முற்பகல் பிரதமரை சந்தித்தனர். 

இதன்போது அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், அமைச்சு பதவிகளை ஏற்காவிட்டாலும், நாடாளுமன்றத்தில் குழுக்களில் அங்கம் வகித்து அரச நிர்வாகத்தில் பங்கேற்பதற்கு மேற்படி கட்சிகளின் பிரதிநிதிகள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.  

“ நாடாளுமன்றத்தில் சுமார் 15 ஆலோசனைக்குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.”  – என்று மேற்படி சந்திப்பின் பின்னர் உதய கம்மன்பில கருத்து வெளியிட்டார்.

விரைவில் இடைக்கால வரவு- செலவுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.

அரசமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டத்தை விரைவில் நிறைவேற்றுவது சம்பந்தமாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன. 

Leave a Reply