You are currently viewing ‘சட்டம், ஒழுங்கை பாதுகாக்க ஒத்துழைப்பு தாருங்கள்’

‘சட்டம், ஒழுங்கை பாதுகாக்க ஒத்துழைப்பு தாருங்கள்’

 நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ளது. ஊரடங்கு சட்டமும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவற்றை பொருட்படுத்தாமல் – சட்டத்துக்கு கட்டுப்படாமல் வன்முறை  முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிலை நீடித்தால் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டிய நிலை பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு ஏற்படும்.”

இவ்வாறு பாதுகாப்பு செயலாளர் கமல் குணவரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட மோதல்களால் நேற்று  மாலைவரை இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகளுக்கு தீ வைப்பு மற்றும்  சொத்துகளுக்கு தேசம் விளைவிக்கும் 104 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 60 வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளன. 40 வாகனங்களுக்கு தேசம் விளைவிக்கப்பட்டுள்ளன என சேத விவரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். 

ஜனநாயக வழியில் போராடுங்கள். எவரும் வன்முறையில் ஈடுபடவேண்டாம். சொத்துகளுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம்.  எமது மக்களையே கொல்ல வேண்டாம். அவ்வாறு செய்வது தவறு. சட்டத்தை கையில் எடுத்து, வன்முறையில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

அவசரகால சட்டம், ஊரடங்கு சட்டம் என்பன அமுலில் உள்ள நிலையில்கூட சிலர் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அதனை பயன்படுத்தி மேலும் சிலர் சூறையாடுகின்றனர்.  இந்நிலைமை நீடிக்ககூடாது, அதற்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். ஆகவே பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பாதுகாப்பு செயலாளர் கோரிக்கை விடுத்தார்.

அவ்வாறு இல்லாவிட்டால் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Leave a Reply