You are currently viewing ‘தமிழர்களின் பாதுகாப்புக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியம்’

‘தமிழர்களின் பாதுகாப்புக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியம்’

சீர்திருத்தப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தமிழர்களின் பாதுகாப்புக்கு அவசியமானதாகும் என்று சிரேஷ்ட அரசியல் ஆய்வாளரும், இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்தார். 

நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று  எதிர்க்கட்சிகள் எடுத்துள்ள நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

எதிரணி தற்போது நிறைவேற்று அதிகார ஜனதிபதி முறைமையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற நிலைப் பாட்டை எடுத்து கோஷங்களை எழுப்ப ஆரம்பித்துள்ளன.

உண்மையிலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை சீர்திருத்துவதற்குப் பதிலாக அதனை ஒழிப்பதற்கான முழக்கத்தை இட்டுவருகின்றன.

இலங்கையின் பிரகாசமான எதிர்காலத்தைப் பறித்த கொள்கைகளும் அனைத்து அடிப்படைத் தவறுகளும் நாடாளுமன்ற ஆட்சி முறைமையின் கீழாகவே நடைபெற்றுள்ளன. 

மலையகத் தமிழர்களின் குடியுரிமைபறிக்கப்பட்டது. தனி சிங்கள சட்டம் உருவாக்கப்பட்டது. பொதுத்துறையில் தேர்ச்சிக்கான பரீட்சைகள், பாடசாலைகளில் பயிற்று விக்கும் முறை மாற்றம், பாடசாலைகளை மத்திய அரசின் கீழ் கையகப்படுத்தல்,பல்கலைக்கழக நுழைவுத் தரப்படுத்தல் கொள்கை ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டன.

ஜே.வி.பியின் 1971 கிளர்ச்சி மற்றும் அதன் இரத்தக்களரி ஒடுக்குமுறைசுதந்திரமான பொதுச்சேவை ஆணைக் குழு ஒழிக்கப்பட்டமை, அரச நிர்வாகத்தை அரசியல்வாதிகளுக்கு அடிபணியச் செய்யப்பட்டமை,  சிங்களத்துக்கான

அரசமைப்பு அந்தஸ்து,  பெளத்த மதத்துக்கு முதலிடம் ஆகியனவும் ஏற்படுத்தப்பட்டன.

1972 இல் தமிழ் புதிய புலிகளின் உருவாக்கம், 1976 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் உருவாக்கம், 1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஆகியனவும் நாடாளுன்ற முறைமையின்கீழேயே இடம்பெற்றன.

இவ்வாறிருக்கையில், ஜனாதிபதிமுறைமையின் கீழாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையக மக்களின்வாக்குரிமை உறுதிப்படுத்தப்பட்டமை, மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வுக்கான 13 ஆவது திருத்தச்சட்டம்விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை, 200 ஆடைத் தொழிற்சாலைகள் வேலைத்திட்டம் போன்ற ஏற்படுத்தப்பட்டன. ஆகவே, ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் முயற்சி, பொருத்தமற்றது. மாறாக, எதேச்சதிகார ஜனாதிபதி முறை சீர்திருத்தப்பட்டு நிறைவேற்று அதிகார முறைமை நீடிக்க வேண்டும். – என்றார்.