நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி அரசமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள அழைப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார்.
” நாட்டை சீரழித்த கள்வர் கூட்டத்துடன் இடைக்கால அரசமைக்க தயாரில்லை. இந்த முடிவு மாறாது.” – என்று சஜித் பிரேமதாச இன்று திட்டவட்டமாக அறிவித்தார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு தீர்வைகாண சர்வக்கட்சி அரசொன்றை அமைக்குமாறு மகாநாயக்க தேரர்கள், பேராயர் உட்பட ஆன்மீக தலைவர்களும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், சிவில் அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கமையவே சர்வக்கட்சி அரசமைக்க கொள்கை அடிப்படையில் தான் இணக்கம் என்ற அறிவிப்பை ஜனாதிபதி நேற்று விடுத்தார்.
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆளுங்கட்சி மற்றும் நாடாளுமன்றத்தில் சுயாதீன அணிகளாக செயற்படும் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர்,
” ஜனாதிபதியும், பிரதமருடன் பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. எனவே, சர்வக்கட்சி அரசியல் நாம் இணையமாட்டோம். ஜனாதிபதியும், பிரதமரும் தற்போது நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த அரசை மக்கள் சக்திமூலம் விரட்டியடிப்போம். எமது கட்சியின் யாத யாத்திரையின் பிரதான நோக்கம் மக்களுக்கான, மக்கள் ஆட்சியை அமைப்பதாகும். தேசிய பாதுகாப்பும், கள்வர்களை பிடிக்கும் பொறுப்பும் பொன்சேகாவிடம் ஒப்படைக்கப்படும்.” – எ
