You are currently viewing ’21’ ஐ இறுதிப்படுத்த அமைச்சரவை உபகுழு!

’21’ ஐ இறுதிப்படுத்த அமைச்சரவை உபகுழு!

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை   முழுமையாக நீக்குவதற்கு,  ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச அமைச்சரவைக் கூட்டத்தில் இணக்கத்தை வெளியிடவில்லை. 

அத்துடன், 19 மற்றும் 20 ஆவது திருத்தச்சட்டங்களில் உள்ள சிறப்பம்சங்களை உள்ளடக்கிய வகையில் 21ஆவது திருத்தச்சட்டத்தை முன்வைக்குமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். 

புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில், ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு நடைபெற்றது. 

இதன்போது, நிறைவேற்று அதிகார  ஜனாதிபதிக்கான அதிகாரங்களை பலப்படுத்திய 20 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கிவிட்டு,  19 ஐ திருத்தங்கள் சகிதம் செற்படுத்துவதற்னான யோசனையை பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்வைத்துள்ளார்.  

இதற்கு ஜனாதிபதி உடன்படவில்லை.  19 மற்றும் 20 ஆகிய இரண்டிலும் உள்ள சிறப்பம்சங்களை உள்ளடக்கிய வகையில் 21 ஐ முன்வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.  

இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கு அமைச்சரவை உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான அலி சப்ரி, தினேஷ் குணவர்தன, ஜி.எல். பீரிஸ் , டக்ளஸ் தேவனாந்தா மற்றும் ரமேஷ் பத்திரண ஆகியோர் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவால் தயாரிக்கப்படும் யோசனையே நாடாளுமன்றத்தில், சட்டமூலமாக முன்வைக்கப்படும்.  

எனினும், அரசமைப்பில் மறுசீரமைப்பு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Leave a Reply