You are currently viewing 21 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைப்பு – உள்ளடக்கங்கள் எவை?

21 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைப்பு – உள்ளடக்கங்கள் எவை?

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து, நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறைமையை ஏற்படுத்தும் வகையிலான அரசமைப்பு திருத்த யோசனையை 21ஆவது திருத்தச்சட்டமூலமாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்றுசமர்ப்பித்துள்ளது.

அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் சிலம்பலாப்பிட்டிய தலைமையிலான குழுவினர் 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை சபாநாயகரிடம் கையளித்தனர்.  

21 ஆவது திருத்தச்சட்டமூலத்தின் ஏற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியவை வருமாறு,

” நாடாளுமன்ற பேரவை நீக்கப்பட்டு,  அரசியலமைப்பு சபை மீண்டும் உருவாக்கப்படும். இவ்வாறு 19 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்த சிறப்பம்சங்களை பாதுகாத்தவாறு, 20 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக இல்லாதொழிக்கப்படவேண்டும். சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட வேண்டும். 

சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சபையொன்றும் ஸ்தாபிக்கப்படும். இவை உட்பட மேலும் பல ஏற்பாடுகள் உள்ளன. “- என்றார்.