சிஸ்டம் சேஞ்சை’ (கட்டமைப்பு மாற்றம்) ஏற்படுத்துவதற்கு இதுவே சிறந்த தருணமாகும். அதற்காகவே புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கு இளைஞர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்.
புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட பின்னர் இன்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” புதிய அமைச்சரவை நியமனத்தின்போது, சிரேஷ்டத்துவத்தை கருத்திற் கொள்ளாமல் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சுப் பதவி என்பது வரப்பிரசாதம் அல்ல, அது பாரிய பொறுப்பாகும். எனவே, அமைச்சர் என்ற வகையில் கூடுதலாக எவ்வித வரப்பிரதாசங்களையும் பயன்படுத்த வேண்டாமென கேட்டுக்கொள்கின்றேன்.
நேர்மையான, திறமையான, கறைபடியாத ஆட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.
அதேபோல அமைச்சுகளின் கீழ் வரும் அரச நிறுவனங்களில் ஊழல்கள் இடம்பெறாது , மக்களுக்கு சிறந்த சேவை வழங்கும் நிறுவனங்களாக அவை விளங்க வேண்டும். இன்று பெரும்பாலான அரச நிறுவனங்கள், நிதி நெருக்கடிக்கு மத்தியில்தான் இயங்குகின்றன. இந்நிலைமை சரி செய்யப்பட வேண்டியது கட்டாய தேவையாகும்.
தற்போதைய சூழ்நிலையில், மக்கள் கோரிய ‘சிஸ்டம் சேஜ்’ (கட்டமைப்பு மாற்றம்) ஏற்படுத்த உங்களுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இளைஞர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.
