சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்காதிருக்க பிரதான கட்சிகள் முடிவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டை  புறக்கணிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.    

ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கட்சி தலைமையகத்தில் இன்று(21) நடைபெற்றது.   

இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டதென ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார் . 

“ஊடக கண்காட்சிக்காகவே அரசால் சர்வக்கட்சி மாநாடு நடத்தப்படுகின்றது. பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற உண்மையான நோக்கம்  இல்லை. எனவே, அப்படியான மாநாட்டில் பங்கேற்பதில் எவ்வித பயனும் இல்லை.” – என்வும் அவர் கூறினார். 

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு விரிவானதொரு கடிதம் அனுப்பிவைக்கப்படும் எனவும், நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு கேட்டறியப்படும் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.  

அதேவேளை, ஜனாதிபதி தலைமையில் மார்ச் 23 ஆம் திகதி நடைபெறும் சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என தேசிய மக்கள் சக்தியும் அறிவிப்பு விடுத்துள்ளது.  

விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பிலவின் பிவிதுரு ஹெல உறுமய, வாசுதேவ நாணயக்காரவின் ஜனநாயக இடதுசாரி முன்னணி என்பனவும் மாநாட்டை புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளன.  

Leave a Reply