தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் மார்ச் 09 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.
மார்ச் மாதத்துக்கான முதல் வார நாடாளுமன்ற கூட்டத்தொடர் மார்ச் 08 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
இதன்படி மார்ச் 08ஆம் திகதி மு.ப 10.00 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவிருப்பதுடன், மு.ப 11.00 மணி முதல் பி.ப 4.30 மணிவரை புலமைச் சொத்து (திருத்தச்) சட்டமூலத்தை (இரண்டாவது மதிப்பீடு) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், மார்ச் 09ஆம் திகதி மு.ப 11.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
மார்ச் 10ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் பி.ப 12.30 மணி வரை வேலையாட்கள் நட்டஈடு (திருத்தச்) சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
