இனி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறமுடியாது என்பது இந்த ஆடசியாளர்களுக்கு தெரியும். அதனால் புதிய அரசமைப்பு ஊடாக அத்தேர்தல் முறைமை இல்லாது செய்யப்படலாம் – என்று தேசிய சுதந்திர முன்னணின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தனிப்பட்ட இலக்குகளை அடைவதை நோக்காகக்கொண்டது அல்ல எனது அரசியல் பயணம். எல்லா சந்தர்ப்பங்களிலும் நாட்டு பக்கம் நின்றே தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிர்ப்பார்ப்பு என்னிடம் இல்லை.
இனியொரு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமா என்பதும் தெரியாது. ஏனெனில் புதிய அரசமைப்பு ஊடாக ஜனாதிபதித் தேர்தல் முறைமையை ஒழிப்பதற்குகூட நடவடிக்கை எடுக்கப்படலாம். ஜனாதிபதித் தேர்தலில் இனி வெற்றிபெற முடியாது என்பது ஆட்சியாளர்களுக்கு தெரியும். அதனால் தனக்கு ஏற்ற விதத்திலான தேர்தல் முறைமையை உருவாக்கிக்கொள்வதற்கு முயற்சிக்கின்றனர்.
மாகாணசபைத் தேர்தல் முறைமைக்கூட தமக்கு சாதகமான வகையிலேயே ஆளுங்கட்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது 35 வீத வாக்குகளைப் பெறும் தரப்பு வெற்றி என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏனைய தரப்புகள் இணைந்து அதைவிட அதிக வாக்குகளைப் பெற்றிருந்தால்கூட வெற்றி 35 வீதம் உள்ள பக்கத்துக்கே. இப்படியான நகர்வுகள் வேறு எங்கும் நடப்பதில்லை.” – என்றார் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச.
