You are currently viewing ‘பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம்’ – மலையக கட்சிகளும் பேராதரவு!

‘பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம்’ – மலையக கட்சிகளும் பேராதரவு!

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் சர்வதேச அழுத்தங்கள் ஊடாகவேனும் அதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நுவரெலியா நகரிலும் நேற்று (06.03.2022) கையெழுத்து திரட்டப்பட்டது. இதில் கலந்துகொண்டு – கையெழுத்திட்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, 

” பயங்கரவாத தடைச்சட்மானது இந்த நாட்டுக்கு பெரும் சாபக்கேடாகும். நாட்டில் வாழும் அனைவரும் இதனால் பாதிக்கப்பட்டிருந்தாலும் வடக்க, கிழக்கில் வாழும் மக்களே பெரும் வலிகளை அச்சட்டத்தால் சுமந்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சிலர், இன்னமும் சிறைகளில் வாடுகின்றனர். வழக்கு விசாரணைகூட இல்லை. 

அதேபோல வடக்கு, கிழக்கு இளைஞர்களுடன் நட்பை பேணிய மலையக இளைஞர்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். எனவே, இனியும் இப்படியான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது. அப்படியானால் இச்சட்டம் நீக்கப்பட வேண்டும். அதனை அரசு செய்ய வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் வலியுறுத்தியுள்ளது. அரசு இதனை செய்யாவிட்டால், சர்வதேச அழுத்தங்கள் ஊடாகவேனும் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

அதேவேளை, மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி என்பனவும் இந்த வலியுறுத்தலை ஏற்கனவே விடுத்துள்ளன.

Leave a Reply