You are currently viewing ‘உள்ளக போர்க்குற்ற விசாரணை அவசியம்’

‘உள்ளக போர்க்குற்ற விசாரணை அவசியம்’

” போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லையெனக்கூறி,  ஒளிவதைவிடவும், போர்க்குற்ற விசாரணைக்கு அரசு அச்சமின்றி முகங்கொடுக்க வேண்டும். எவரேனும் போர்க்குற்றம் இழைத்திருந்தால் உள்ளக பொறிமுறையின் பிரகாரம் தண்டனை வழங்கப்பட வேண்டும்.” – என்று இறுதிக்கட்டப்போரை வழிநடத்திய இராணுவத்தளபதியான பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா எம்.பி. தெரிவித்தார். 

நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று (23.02.2022) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமூறு, 

” மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் இருந்து நாட்டை விடுவித்துக்கொள்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பாக போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து படையினரை மீட்டெடுக்க முதலில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே,  முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அச்சமின்றி முகங்கொடுக்க வேண்டும். மாறாக அவ்வாறு எதுவும் செய்யவில்லையென ஒளிவதில் பயன் ஏதும் ஏற்படப்போவதில்லை. எவரெனும் தவறிழைத்திருந்தால் தேசிய பொறிமுறையில் அவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இதனை நாம் செய்யாததால், சட்டப்பூர்வமாக போரை முடித்தவர்களுக்கக்கூட போலி குற்றச்சாட்டுகளுக்கு இலக்காக வேண்டியுள்ளது. இது கவலைக்குரிய விடயமாகும்.   

மனித உரிமை ஆணையாளருக்கு நாம் அஞ்சவில்லை. ஆயிரக்கணக்கில் சாட்சியங்களை திரட்டியுள்ளாராம். படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களில் 99 வீதமானோர் புலி ஆதரவாளர்கள் என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகின்றோம். இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது எனக்கூறப்படுவது அப்பட்டமான பொய். புலிகள் பணயக் கைதிகளாக வைத்திருந்த மக்களை, தியாகங்களுக்கு மத்தியில் படையினரே மீட்டனர். சர்வதேச சட்டத்திட்டங்களுக்கமையவே நாம் போரிட்டோம். பின்களத்தில் இருந்த ஓரிருவர் தவறிழைத்திருக்கலாம். அது தொடர்பில் எனக்கும் சந்தேகம் தொடர்பில் அது பற்றி தேடி பார்க்கலாம். அப்போதுதான் படையினரின் நன்மதிப்பை காத்துக்கொள்ள முடியும்.” – என்றும் பொன்சேகா குறிப்பிட்டார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது. இந்நிலையில் பொன்சேகா வெளியிட்டுள்ள மேற்படி கருத்துகள் இராஜதந்திர மட்டத்திலும் தாக்கம் செலுத்தும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply