You are currently viewing எம்.பிக்கள் பயன்படுத்தும் புத்தகங்கள் குறித்து சபாநாயகர் வருத்தம்!

எம்.பிக்கள் பயன்படுத்தும் புத்தகங்கள் குறித்து சபாநாயகர் வருத்தம்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் பயன்படுத்தும் புத்தகங்கள் குறித்து சபாநாயகர் தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

கடந்த வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற நூலகத்தில் இருந்து 330 புத்தங்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இவற்றில் 122 புத்தகங்கள் கற்பனைத் தலைப்புக்களில் வருபவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத்தவிர அரசியல் விஞ்ஞானம் குறித்த 94 புத்தகங்களும், சமூகவியல் குறித்த 27 புத்தகங்களும், பொருளாதாரம் குறித்த 11 புத்தகங்களும், விஞ்ஞானம் குறித்த 5 புத்தகங்களும், சட்டத்துறை சார்பான 4 புத்தகங்களும், தொழில்நுட்பம் குறித்த 3 புத்தகங்களும், கல்வி மற்றும் சிங்கள மொழி மூலமான தலா ஒரு புத்தகமும் அடங்குவதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

இது வெட்கப்படவிடயம் என்று குறிப்பிட்ட சபாநாயகர், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொள்வதிலேயே காலத்தை வீணடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பொய்யான குற்றச்சாட்டுக்களும், தகாத வார்த்தைகளும், நாட்டிற்கு பயனற்றது எனவும், நாடாளுமன்றத்தில் ஆற்றும் உரை நாட்டை வழிகாட்டும் வகையில் இருக்க வேண்டும் என்றும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.